மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புகள் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பருவத்தேர்வு மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட உள்ளதாக அதற்கான அட்டவணை பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பருவத்தேர்வு அட்டவணை:
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் கொரோனா காரணமாக 10 மாதங்களாக திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு பல மாதங்களாக வகுப்புகள் நடைபெறாததால் பாடங்களை விரைந்து முடிக்க முடியாத காரணத்தால் தேர்வுகள் வழக்கம் போல் நடத்த முடியாத நிலை உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சில பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தியது. தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான பருவத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 24 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் இந்த தேர்வுகள் மார்ச் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள முதுகலை படிப்புகளில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், சமூகப்பணி, இந்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, எம்.காம், கணினி பயன்பாடுகள், பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிர் வேதியியல், உயிர் தொழில்நுட்பம் பிரிவுகளில் தனித்தனியாக அட்டவணை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.