அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள சுயநிதி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.டெக்., கலந்தாய்வு நாளை 22 ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி, காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லைரிகளில் காலியாக உள்ள பி.டெக்., சுயநிதி காலி யிடங்களை நிரப்ப சென் டாக் திட்டமிட்டுள்ளது.
இதற்கான கவுன்சிலிங் நாளை 22ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. மதியம் 2 மணிக்கு பி.டெக்., அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் துவங்குகிறது. தகுதி வாய்ந்த காரைக்கால், மாகி, ஏனாம், மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.பின்னர், 3.30 முதல் 5.30 மணி வரை நடக்கும் பி.டெக்.,அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கவுன்சிலிங்கில் கட் ஆப் மதிப்பெண் 99.333 மதிப்பெண் முதல் 69.333 வரை எடுத்த மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
23ம் தேதி காலை 9 முதல் மதியம் 1 மணி வரை கட் ஆப் மதிப்பெண் 69.167 முதல் 41,667 வரை எடுத்த மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.சிறப்பு கவுன்சிலிங்இறுதி கட்ட மாப் அப் கவுன்சிலிங்கிற்கு பிறகு பி.எஸ்.சி., அக்ரி, தோட்டக்கலை, பி.பார்ம், பி.எஸ்.சி., நர்சிங் படிப்புகளில் காலியிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த இடங்களுக்கு வரும் 23ம் தேதி சிறப்பு கவுன்சிலிங் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு துவங்கும் கவுன்சிலிங்கில் தகுதி வாய்ந்த உயிரியல் படிப்பிற்கும், டிப்ளமோ படிப்பிற்கும் விண்ணப்பித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.மாலை 3 மணிக்கு நடக்கும் இரண்டாம் அமர்வு கலந்தாய்வில் காரைக்கால், மாகி, ஏனாம், இட ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
பின்னர் 4 மணிக்கு மூன்றாம், நான்காம் அமர்வு கலந்தாய்வில் உயிரியல் படிப்பு தரவரிசை பட்டியலில் 99.333 மணி முதல் கட் ஆப் மதிப்ெபண் 41 வரை எடுத்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு சென்டாக் இணைய தளத்தை பார்க்கவும். இத்தகவலை சென்டாக் கன்வீனர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.
Search This Blog
Sunday, February 21, 2021
Comments:0
Home
Colleges
Counselling
அரசு கல்லூரி காலி இடங்களுக்கான .பி.டெக்., கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்ப அழைப்பு
அரசு கல்லூரி காலி இடங்களுக்கான .பி.டெக்., கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்ப அழைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.