ஆசிரியர் பணி வயது வரம்பு 40 அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 26, 2021

Comments:0

ஆசிரியர் பணி வயது வரம்பு 40 அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு!

ஆசிரியர் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட அர சாணையை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பாக பள்ளி கல்வித் துறை செயலர் , ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . விருதுநகர் மாவட்டம் , அருப்புக் கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த சுமதி , உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு :
10 மற்றும் 12ம் வகுப்பு பாடங்களை ஒலிப் பாடங்களாக ( Audio Lessons) அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்தல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்!
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற் கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது . கடந்த ஆண்டு வரை ஆசிரியர் பணிக்கு 58 வயது வரை விண்ணப்பிக்க முடியும் . ஆனால் தற்போதைய அறிவிப்பில் 2021 ஜூலையில் 40 வயதை கடந்தவர் கள் விண்ணப்பிக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது . இதனால் 40 வயதை கடந்தோர் பாதிக்கப் பட்டுள்ளனர் .
பள்ளிக் கல்வி- பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச அறிவியல் நாள் – பெண் குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பெண் குழந்தைகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற் கல்வி) உத்தரவு!
எனவே , தொடக்க , உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் . இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது .
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி , நீதிபதி ஹேமலதா அமர்வு விசாரித்தது . மனு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித் துறை செயலர் , ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு , அடுத்த விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர் .

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews