Breaking

Sunday, February 07, 2021

துணை மருத்துவ படிப்புகளுக்கு 9ம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு: சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், அனஸ்தீசியா, கார்டியாக் டெக்னாலஜி உட்பட 17 துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. இதில் அரசு கல்லூரியில் உள்ள ஆயிரத்து 590 இடங்களுக்கும், தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் 13 ஆயிரத்து 858 இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான, 2020-21ம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த அக்டோபரில் நடந்தது. மொத்தம், 38 ஆயிரத்து 244 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 37 ஆயிரத்து 334 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல் www.tnmedicalselection.net என்ற மருத்துவ மாணவர் சேர்க்கை குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து துணை மருத்துவப் படிப்பு கவுன்சலிங், வரும் 9ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடக்கிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog