குஜராத்தில் 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 18ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவலால் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இதேபோல், இந்த வகுப்புகள் அனைத்திற்கும் ஆன்லைன் கல்வியும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் 9 முதல் 12 வகுப்புகளுக்கு இயல்பான வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கும், கல்லூரியின் முதல் ஆண்டுக்கான கல்வியை மீண்டும் தொடங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. எனவே குஜராத் அரசு இன்று 6 முதல் 8 ஆம் வகுப்புகளை மாநிலத்தில் தொடங்குவது குறித்து முடிவு செய்துள்ளது. மேலும் நேரடி வகுப்புகளுக்கு இணையாக ஆன்லைன் கல்வியையும் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த முடிவைப் பற்றி கல்விச் செயலாளர் வினோத் ராவ் கூறுகையில், மாநிலத்தின் அனைத்து பள்ளிகளும் கோவிட் -19 வழிகாட்டுதல்களையும், கல்வியை மீண்டும் தொடங்குவதற்கான நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி மாணவர்களின் வருகை கட்டாயமாக்கப்படாது, ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களின் பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.
Search This Blog
Saturday, February 13, 2021
1
Comments
6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 18 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
எந்த மாநில அரசு என தலைப்பில் குறிப்பிடலாமே ? ஏன் இப்படி ?!
ReplyDelete