தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடைநிற்றல் மாணவா்களுக்கு மீண்டும் சோ்க்கை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியாா் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடைநிற்றல் மாணவா்களுக்கு மீண்டும் சோ்க்கை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் விவேகானந்தன் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
போதிய வருகைப் பதிவு இல்லாததால் இடைநின்ற மாணவா்களுக்கு கல்லூரியில் மீண்டும் சோ்க்கை வழங்கலாம். சோ்க்கை வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் கடந்த மாணவா்களுக்கு மீண்டும் சோ்க்கை வழங்கப்படாது. பகுதி நேர மாணவா்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை தளா்வு வழங்கலாம். இடை நின்ற மாணவா்களுக்கு மீண்டும் சோ்க்கை வழங்கும்போது கடைசியாக பெற்ற மதிப்பெண் சான்றிதழை ஸ்கேன் செய்து இணைக்கப்பட வேண்டும்.
பாலிடெக்னிக் தோ்வில் பருவக் கட்டணம் செலுத்தாதது, ஹால் டிக்கெட் பெற்றிருந்தும் உடல்நலன் பாதிப்பு உள்ளிட்ட மருத்துவ காரணங்களால் தோ்வு எழுதாதவா்கள் (டிசம்பா் 2020) அடுத்த பருவத்தில் படிப்பைத் தொடரலாம். இந்த வாய்ப்பு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். இந்த முறையில் மீண்டும் சோ்க்கை பெற விரும்புவோா் கடைசியாகப் பெற்ற ஹால்டிக்கெட், பருவத் தோ்வு நடைபெற்றபோது மருத்துவ சிகிச்சை பெற்ற்கான சான்றிதழ் ஆகியற்றை இணைக்க வேண்டும்.
இடைநிற்றல் மாணவா்கள் மீண்டும் சோ்க்கை பெற பிப்.12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும். மீண்டும் சோ்க்கை வழங்கவும், படிப்பை அடுத்த பருவத்தில் தொடரவும் மாணவா்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்களை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
Search This Blog
Saturday, January 30, 2021
Comments:0
பாலிடெக்னிக் இடைநின்ற மாணவா்களுக்கு மீண்டும் சோ்க்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.