தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை அறிய 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் ஆன்லைன் தேர்வுகள் 30 மதிப்பெண்களுக்கு நடத்த சி.இ.ஓ சுவாமிநாதன் உத்தரவிட்டு உள்ளார்.
மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள்:
மதுரையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி சி.இ.ஓ சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றல் திறனை அறிய ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் 2020 மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் நடத்தப்பட்டது. காலாண்டு தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன. ஆனால் அவர்களுக்கு அந்த வகுப்புகள் எந்த அளவிற்கு பயனுள்ளதாக உள்ளது என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன்படி அவர்களது கற்பிப்பதை மேம்படுத்த வேண்டும்.
அதற்காக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர அனைத்து பாடங்களிலும் தலா 30 மதிப்பெண்கள் அடிப்படையில் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மேலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களிலும் தேர்வு நடத்த வேண்டும். இந்த தேர்வுகளை பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள கணினிகளை பயன்படுத்தி சுழற்சி முறையில் மாணவர்களை பங்கேற்க வைத்து தலைமை ஆசிரியர்கள் நடத்த வேண்டும்.
Search This Blog
Friday, January 22, 2021
Comments:0
Home
CEO/DEO/SPD
EXAMS
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு – சி.இ.ஓ உத்தரவு!
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு – சி.இ.ஓ உத்தரவு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.