‘தமிழகத்தில் காலியாக உள்ள 117 எம்பிபிஎஸ், 459 பிடிஎஸ் இடங்கள் நிரப்புவதற்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க, மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ கலந்தாய்வு தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்தை பொருத்தமட்டில் மாநிலம் முழுவதும் மொத்தம் 34,424 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 3,650 மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில், மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி ஜனவரி 15ம் தேதி வரை இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு அறிவித்த 7.5சதவீத இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு, பொது பிரிவினர்கள், சிறப்பு பிரிவினர் என அனைவருக்கும் திட்டமிட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து கலந்தாய்வுக்கான காலக்கெடு என்பது தற்போது முடிவடைந்து இருந்தாலும், மாநிலம் முழுவதும் பல இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் மருத்துவம் பயில நிலைத்த மாணவர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்துவிட்டது. இதுகுறித்து அனைத்து தரப்பிலும் குற்றச்சாட்டும் எழுந்தது. இதில் குறிப்பாக தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 5 எம்.பி.பி.எஸ் இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 112 இடங்களும், அதேப்போன்று அரசு பல் மருத்துவ கல்லூரியில் 12 பிடிஎஸ் இடங்களும், சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 447 பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘மருத்துவ கலந்தாய்வுக்கான காலக்கெடு தற்போது முடிந்து விட்டாலும், தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இது மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால் அதனை சரி செய்யும் விதமாக மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க தமிழகத்திற்கு மேலும் ஒரு வாரம் காலஅவகாசம் வழங்க வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளது. இதில் வழங்கப்படும் வழங்கப்படும் அவகாச நாட்களில் தமிழகத்தில் மீண்டும் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Search This Blog
Friday, January 22, 2021
Comments:0
Home
Counselling
CourtOrder
MBBS
TAMILNADU
மருத்துவ கலந்தாய்வு நடத்த மேலும் ஒரு வாரம் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
மருத்துவ கலந்தாய்வு நடத்த மேலும் ஒரு வாரம் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
Tags
# Counselling
# CourtOrder
# MBBS
# TAMILNADU
TAMILNADU
Labels:
Counselling,
CourtOrder,
MBBS,
TAMILNADU
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.