1.31 லட்சம் பேர் எழுதிய குரூப் 1 தேர்வில் 6 கேள்விகள் தவறு: தேர்வு எழுதியவர்கள் புகார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 05, 2021

Comments:0

1.31 லட்சம் பேர் எழுதிய குரூப் 1 தேர்வில் 6 கேள்விகள் தவறு: தேர்வு எழுதியவர்கள் புகார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குரூப் 1 தேர்வில் 6 கேள்விகளில் வினா, விடை, மொழியாக்கம் தவறாக இருந்ததாக தேர்வர்கள் புகார் கூறியுள்ளனர். அதற்கு உரிய மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடத்துக்கு முதல்நிலை தேர்வை நேற்று முன்தினம் நடத்தியது. இத்தேர்வை 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் எழுதினர். இத்தேர்வில் பொது அறிவியலில் 175 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் அனைத்தும் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒவ்வொரு வினாக்களுக்கும் ஒன்னரை மதிப்பெண்கள் வீதம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்வில் கேட்கப்பட்ட 32, 33, 59, 64, 90, 163 என 6 வினாக்களில் வினா, விடை, மொழியாக்கம் ஆகியவை தவறாக இருந்ததாக தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதாவது 32வது கேள்வியில் திராவிட பண்டிதன் என்ற பத்திரிகையை ஆரம்பித்தவர் யார்? என்று கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்வி தவறு என்றும், “திராவிட பாண்டியன் என்ற பத்திரிகையை ஆரம்பித்தவர் யார்?” என்று கேள்வி கேட்டிருக்க வேண்டும். அதே போல தமிழகத்தில் 1927 ஆம் ஆண்டு, நீல் உருவ சிலை சத்தியகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி(தியாகி) என்ற கேள்விக்கு கே.பி.சுந்தராம்பாள், பத்மாசானி அம்பாள், முத்துலட்சுமி ரெட்டி, செல்வி துர்க்காபாய் என்று விடை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடைகள் அனைத்தும் தவறு ஆகும். இதற்கு சரியான விடை, ‘‘அஞ்சலை அம்மாள், அஞ்கச்சி அம்மாள்” என்று தேர்வர்கள் கூறியுள்ளனர். இதே போல இந்தியாவில் ரயில்வே மண்டலங்களின் எண்ணிக்கை? என்ன என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு வழங்கப்பட்ட விடைகள் அனைத்தும் தவறாக உள்ளது என்றும் தேர்வர்கள் கூறியுள்ளனர். இப்படி 6 கேள்விகளில் வினா, விடை, மொழியாக்கம் தவறாக இருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு தகுந்த மதிப்பெண்ணை வழங்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சிக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளுக்கு ஒரு வாரத்திற்குள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் கீ ஆன்சர் வெளியிடப்படும். அதற்கு தகுந்த ஆதாரங்களுடன் ஆட்சேபனை தெரிவிக்க 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அதற்குள் ஆதாரங்களை அளித்தால், அதனை வல்லூனர் குழு ஆராயும். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் மதிப்பெண் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews