Breaking

Saturday, January 09, 2021

'ஜாக்டோ- ஜியோ' அரசுக்கு கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட, 'மெமோ'க்களை ரத்து செய்யுமாறு, அரசுக்கு, 'ஜாக்டோ -ஜியோ' கோரிக்கை விடுத்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்த, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளுக்கான போராட்டம் நடத்தப்படுகிறது. வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த பட்டியலில் இடம்பெற்ற, 5,068 பேருக்கு, 'மெமோ' தரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஊதிய உயர்வு, பதவி உயர்வு எதுவும் கிடைக்காமல், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து, ஜாக்டோ -ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், சென்னையில், இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது.இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான, மெமோவை அரசு ரத்து செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து, அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது பற்றி, 21ம் தேதி, திருச்சியில் உயர் மட்டக்குழு கூடி முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog