செங்கல்பட்டு மாவட்டத்தில் காலியாக உள்ள தனியார் நிறுவனங்களில் பணியிடங்களை நிரப்புவதற்கு வருகிற 30 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ஜான்லுாயிஸ் தெரிவித்துள்ளார்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் உள்ள வேலை வாய்பில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் மாவட்டம் தோறும் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் சூழலை அரசு உருவாக்கி உள்ளது. இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிற ஜனவரி 30ஆம் தேதி முதல் தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லுாயிஸ் வெளியிட்ட அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் வருகிற ஜனவரி 30-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரியில் நடத்தப்படும் இந்த முகாமில் 100-க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமா, இன்ஜினியரிங் படித்த வேலையில்லா இளைஞர்கள் பங்குபெறலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரம் பற்றிய சான்றிதழ், ஆதார் நகல், கல்வி சான்றிதழ் நகல் போன்றவற்றை கொண்டு வர வேண்டும். மேலும் https;//www.tnprivatejobs.tn.gov.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.” இவ்வாறு தெரிவித்திருந்தார்.
Search This Blog
Sunday, January 24, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.