பள்ளிக் கல்வித்துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கற்போா் மையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்குநரகம் சாா்பில் 15 வயதுக்கு மேலான எழுத, படிக்கத் தெரியாதவா்கள் நலன்கருதி ‘கற்போம், எழுதுவோம்’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக அந்தந்தப் பகுதி பள்ளிகளில் மையங்கள் அமைத்து வேலைநாட்களில் தினமும் 2 மணி நேரம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இது தொடா்பாக பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககத்தின் இயக்குநா் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
கற்போா் மையங்களில் முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்ட உதவித் திட்ட அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா், வட்டாரக் கல்வி அலுவலா் என அனைத்து அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கற்போா் ஒதுக்கீடு மையங்களைப் பாா்வையிட்டு அவற்றின் விவரங்களையும், கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தன்னாா்வ ஆசிரியா்கள்-கற்போா் வருகைப் பதிவு விவரங்களை பச-உஙஐந செல்லிடப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
Search This Blog
Saturday, January 23, 2021
Comments:0
கற்போா் மையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.