சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு, கடந்தாண்டு, அக்., ௪ல் நடந்தது. 'கொரோனா வைரஸ் பரவல் இருந்ததால், சரியாக தயாராக முடியவில்லை. அதனால், கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில், மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இதில், ௪.௮௬ லட்சம் பேர் எழுதினர்.கடந்தாண்டு, மே மாதத்தில் நடக்க வேண்டிய தேர்வு, அக்டோபரில் நடந்தது. அதனால், தேர்வுக்கு தயாராக போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை ஏற்க முடியாது.மேலும், தேர்வுக்கு விண்ணப்பித்தோர், ஊரடங்கால் இடம் மாறியிருந்தால், புதிய இடத்திலேயே தேர்வு எழுதவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிப்பது அல்லது வயது வரம்பை நீட்டிப்பது, இந்த தேர்வின் நடைமுறையை சீர்குலைத்துவிடும். தவறான முன்னுதாரணமாகி விடும்.தேர்வை எழுதிய, ௪.௮௬ லட்சம் பேருக்கு அநீதி இழைப்பதாக அமைந்துவிடும். அவர்கள் வழக்கு தொடர வாய்ப்பு அளித்துவிடும். அதனால், கூடுதல் வாய்ப்பு அளிக்க முடியாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து வழக்கின் விசாரணை, ௨௮ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Tuesday, January 26, 2021
Comments:0
ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வு கூடுதல் வாய்ப்பு கிடையாது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.