Breaking

Sunday, December 28, 2025

‘பழைய ஓய்வூதியம் கிடைக்கும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம்'

‘பழைய ஓய்வூதியம் கிடைக்கும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம்'

சேலத்தில், ஜாக்டோ - ஜியோ சார்பில், வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் அர்த்தனாரி, கோவிந்தன் தலைமையில் நேற்று நடந்தது.

இதுகுறித்து மாநில ஒருங்கி ணைப்பாளர் ஆறுமுகம் அளித்த பேட்டி: கடந்த சட்டசபை தேர்த லுக்கு முன், தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினோம்.

அப்போது அவர், 'நாங்கள் ஆட் சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியம் வழங்கப்படும்' என, வாக்குறுதி கொடுத்தார். அதை தேர்தல் வாக் குறுதியாகவும் வெளியிட்டார். அவர் ஆட்சிக்கு வந்தபின், நாங்கள் பல்வேறு கட்ட போராட் டங்கள் நடத்திய நிலையில், சமீ பத்தில் நடந்த பேச்சில், அமைச்சர் தங்கம் தென்னரசு, 'எங்களை நம் புங்கள் தருகிறோம்' என்றார். இப்படி ஒவ்வொரு முறையும் பேசி நம்ப வைத்து, எங்களை ஏமாற்றி வருகின்றனர். நிதிநிலை சரியில்லை என்றால், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், ஆலோசனை

வழங்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி களுக்கும், பழைய ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும்.

பழைய ஓய்வூதியம் உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி, வரும் ஜன., முதல், காலவு ரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட உள்ளோம். பழைய ஓய்வூதியம் கிடைக்கும் பணிக்கு திரும்ப மாட்டோம். வரை

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கள் சங்கர், சுரேஷ், திருமுருக வேல் உள்பட பலர் பங்கேற் றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog