Breaking

Friday, December 11, 2020

டிச.18-ல் வேலைவாய்ப்பு முகாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய எஸ்சி / எஸ்டி தொழிற்பயிற்சி மையம் சார்பில் சென்னையில் டிச.18-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக எஸ்சி / எஸ்டி பிரிவுக்கான தேசிய தொழிற் பயிற்சி மையத்தின் வேலைவாய்ப்பு துணை அதிகாரி எஸ்.கே.சாஹூ (சென்னை மண்டலம்) வெளியிட்ட செய்திக்குறிப்பு: பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு முகாம் டிச.18-ம் தேதி நடத்தப்பட உள்ளது. சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தேசிய தொழிற் பயிற்சி மையத்தில் காலை9.30 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். வங்கி, காப்பீடு, மின்வர்த்தகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத் துறை, பிபிஓ உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. மாத ஊதியமாக ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை கிடைக்கும். இந்த முகாமில் 20 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். அதிக கல்வித் தகுதி உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனினும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சேரந்தவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டாலும், இந்த முகாமில் பொதுப்பிரிவினரும் பங்கேற்கலாம். சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் கொண்டுவர வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 044-24615112 என்றஎண்ணில் தொடர்பு கொள்ளலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog