18 முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றம்: கல்வித்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 09, 2020

Comments:0

18 முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றம்: கல்வித்துறை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அந்த பணிக்கு இணையான பதவிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் சென்னை அலுவலகத்தில் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் துணை இயக்குநர் அறிவழகன், திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன், சென்னையில் உள்ள தொடக்க கல்வி அலுவலகத்தில் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன், சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்கக துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களைப் போல 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, நாகப்பட்டினத்துக்கும், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, ராமநாதபுரத்துக்கும், திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன், அரியலூருக்கும், கன்னியாகுமரி அலுவலர் முருகன், ஈரோட்டுக்கும், ஈரோடு பாலமுரளி, கிருஷ்ணகிரிக்கும், தேனி கோதண்டபாணி, விருதுநகருக்கும், திருநெல்வேலி செந்தில்வேல் முருகன், திண்டுக்கல்லுக்கும், திண்டுக்கல் மணிவண்ணன், தஞ்சாவூர் சரபோஜி மன்னர் நூலகத்தின் நிர்வாக அலுவலராகவும், விழுப்புரம் முனுசாமி, கள்ளக்குறிச்சிக்கும், கள்ளக்குறிச்சி கிருஷ்ணபிரியா, விழுப்புரத்துக்கும், வேலூர் மார்ஸ், திருப்பத்தூருக்கும், மாற்றப்பட்டுள்ளனர். CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews