Breaking

Thursday, November 26, 2020

ஆசிரியர் பணியிடம் நியமனம் - தலைமை ஆசிரியருக்கு உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கையினை 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட உள்ளன. எனவே, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆளுகைக்கு கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரம், மாணவர்களின் எண்ணிக்கையினை 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், 'எமிஸில் பதிவேற்றம் செய்த மாணவர் எண்ணிக்கை விவரப்பட்டியல் குறிப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் நிர்ணயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மாற்றுத்திறனாளி பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்களின் இரண்டு நகல்களை, ஆவணங்களை தலைமை ஆசிரியர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog