'தமிழகத்தில் உள்ள, 584 மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளுக்கான இடங்களில், அரசு டாக்டர்களுக்கு போராடி பெற்ற, 50 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கு கலந்தாய்வு நடத்தாமல், காலம் கடத்துவது கவலை அளிக்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:மத்திய அரசின் மருத்துவ கல்லுாரிகளின் கண்களில் வெண்ணெயும், மாநில அரசின் மருத்துவ கல்லுாரிகளின் கண்களில், சுண்ணாம்பும் தடவி பேதப்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் கீழ் உள்ள, 11 மருத்துவ கல்லுாரிகளுக்கு தனித் தேர்வு நடத்தலாம் என, மத்திய அரசு, இப்போது அனுமதி வழங்கி விட்டது.
இதனால், நாடு முழுவதும் ஒரே தேர்வு என, அறிமுகப்படுத்திய, 'நீட்' தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், நீட் தேர்வு இல்லாமலேயே, முதுநிலை மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். அந்த மாணவர் சேர்க்கை, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற வேண்டும்.
முதல்வர் பழனிசாமி உடனே பிரதமருக்கு கடிதம் எழுதி, உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள, 584 மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளுக்கான இடங்களில், அரசு டாக்டர்களுக்காக போராடி பெற்ற, 50 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கு கலந்தாய்வு நடத்தாமல், காலம் கடத்துவது கவலை அளிக்கிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.