இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 18, 2020

Comments:0

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரியும் மற்ற இடங்களில் ஒன்பது தனியார் கல்லுாரிகளும் உள்ளன.அரசு கல்லுாரியில் 60 இடங்களும் தனியார் கல்லுாரிகளில் 600க்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. தனியார் கல்லுாரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்புக்கு இந்தாண்டு 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்து தகுதியான 2002 பேருக்கான தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.தரவரிசை பட்டியலில் ஷாபிக்கா ரிஸ்வானா முதலிடத்தையும் கீர்த்தி ஸ்ரீ இரண்டாவது இடத்தையும், சாருலதா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். தரவரிசை பட்டியலில் முதல் ஒன்பது இடங்களை மாணவியரும் 10வது இடத்தை ஒரு மாணவரும் பெற்றுள்ளனர்.தரவரிசை பட்டியல் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அடுத்த வாரத்தில் கவுன்சிலிங்கை துவங்க இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை திட்டமிட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews