Breaking

Sunday, November 22, 2020

‘இக்னோ’ படிப்புகளுக்கான கால வரையறையில் மாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
‘இக்னோ’ வழங்கும் படிப்புகளுக்கான கால வரையறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நிகழ் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பல்வேறு பாடங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, இளநிலை, முதுநிலை பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. இந்த படிப்புகளுக்கான கால வரையறையை நடப்பு ஆண்டு முதல் மாற்றியமைத்துள்ளது. இது தொடா்பாக இக்னோ வெளியிட்ட அறிக்கை: இக்னோ வழங்கும் பல்வேறு தொலைதூரப் படிப்புகளின் கால வரையறையில் புதிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முதுநிலைப் பட்டப் படிப்புகளை இனி அதிகபட்சம் 4 ஆண்டுகளில் படித்து முடிக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளை 3 ஆண்டுகளில் படித்து முடிக்க வேண்டும். சான்றிதழ் படிப்புகளை 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்புகளைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வந்ததுபோல் 3 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளுக்குள் இளநிலை பட்டப்படிப்புகளை முடிக்க வேண்டும். இதற்கு முன்னா் முதுநிலை படிப்புகளை முடிக்க 5 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. அகாதெமி கவுன்சில் கூட்டம் கடந்த ஜூலை 21 அன்று நடத்தப்பட்டு புதிய மாற்றங்கள் குறித்துமுடிவு செய்யப்பட்டன. ஏற்கெனவே இக்னோவில் படித்துவரும் மாணவா்கள் பழைய கால வரையறையிலேயே படித்து முடிக்கலாம். நிகழ் கல்வியாண்டில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களுக்கே இது பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog