Breaking

Monday, November 23, 2020

முதுகலை பட்டத்துடன் பயிற்சி பெற்ற ஆயுர்வேத டாக்டர்களும் ஆபரேஷன் செய்யலாம்: அரசாணை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
‘முதுகலை பட்டத்துடன் முறையான பயிற்சி பெற்ற ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம்,’ என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. இந்திய மருத்துவ முறைகளை பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ஆயுஷ் அமைச்சகம் அமைக்கப்பட்டு, ஆயுர்வேத சிகிச்சை முறைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆயுர்வேத மருத்துவர்களும் முறையான பயிற்சியுடன் அறுவைசிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (முதுகலை ஆயுர்வேத கல்வி) விதிமுறைகள் 2016ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, 39 பொது அறுவைசிகிச்சைகள் மற்றும் கண், மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம் தொடர்பான அறுவைசிகிச்சைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன்படி, ஆயுர்வேத முதுகலை மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் பொது அறுவைசிகிச்சை மற்றும் கண், காது, மூக்கு அறுவைசிகிச்சையில் முறையான பயிற்சி பெறவும், பயிற்சியை முடித்ததும் அவர்கள் தனியாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளவும் அங்கீகரிக்கப்படுகின்றனர்,’ என கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கோடெசா கூறுகையில், ‘‘இந்த புதிய அரசாணை, கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமோ அல்லது புதிய முடிவோ அல்ல. ஏற்கனவே நடைமுறையில் உள்ளதை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் நடவடிக்கை. அதே சமயம், இது அறுவைசிகிச்சையின் அனைத்து துறையிலும் ஆயுர்வேத மருத்துவர்களை அனுமதிக்காது. அனைத்து ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவைசிகிச்சை செய்யவும் அனுமதிக்கவில்லை. நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது,’’ என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog