கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணி: நவ. 21, 22-இல் எழுத்துத் தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 18, 2020

Comments:0

கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணி: நவ. 21, 22-இல் எழுத்துத் தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய கூட்டுறவு வங்கி, இதர கூட்டுறவு சங்கங்களில், காலியாக உள்ள, 166 உதவியாளர் பணிக்கு, வரும், 21, 22ல், அடுத்தடுத்து நடக்க உள்ள எழுத்துத்தேர்வுக்கு, 2,809 பேர் தகுதி பெற்றுள்ளனர். சேலம் மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளை வங்கிகளில், காலியாக உள்ள, 114 உதவியாளர் பணிக்கு, 2,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், தகுதியான விண்ணப்பதாரர், 1,682 பேர். அதேபோல், இதர கூட்டுறவு சங்கங்களில், 52 உதவியாளர் பணியிடத்துக்கு, விண்ணப்பித்த, 1,337ல், தகுதியானவர், 1,127 பேர். அவர்களுக்கு எழுத்துத்தேர்வு, வரும், 21, 22ல் தனித்தனியே நடக்க உள்ளது.
மத்திய கூட்டுறவு வங்கி பணிக்கு, சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி; ஜெய்ராம் கலை கல்லூரி; ஜெய்ராம் பப்ளிக் பள்ளி; கணேஷ் கலை கல்லூரி என, நான்கு மையங்களில், 21ல் தேர்வு நடக்க உள்ளது. இதர கூட்டுறவு சங்க பணிக்கு, 22ல், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை தவிர்த்து, மற்ற மூன்று மையங்களில், தேர்வு நடத்தப்பட உள்ளது. காலை, 10:00 முதல், 1:00 மணி வரை, தேர்வு நடக்கும். இதுகுறித்து, மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத் கூறுகையில், ''ஆப்ஜெக்டிவ் டைப்பில், 200 கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும். அத்துடன், இதர அரசு தேர்வு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இணையவழியில், தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,'' என்றார்.
எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் நுழைவுச்சீட்டு, அறிவுரைகள் மற்றும் விவரங்களை http://www.slmdrb.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0427-2415158 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews