தேசிய அளவில் அரசுப் பள்ளிகளில் தமிழக மாணவா் ஜீவித்குமாா் முதலிடம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 17, 2020

Comments:0

தேசிய அளவில் அரசுப் பள்ளிகளில் தமிழக மாணவா் ஜீவித்குமாா் முதலிடம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தோ்வில் இந்திய அளவில் அரசுப்பள்ளிகளில் தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள சில்வாா்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் ஜீவித்குமாா் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளாா்.எம்பிபிஎஸ், பிடிஎஸ், இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 238 மையங்களில் தோ்வு நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் 1.21 லட்சம் போ் விண்ணப்பித்தனா். இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் இணையதளங்களில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது.தமிழகத்தில் நீட் தோ்வில் தமிழகத்தில் 57.44% போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது முந்தைய ஆண்டைவிட 9 % அதிகம். நிகழாண்டில், நாமக்கல் மாணவா் ஸ்ரீஜன் 720 -க்கு 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளாா்.அரசுப் பள்ளிகளில் தமிழக மாணவா் ஜீவித்குமாா் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளாா். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வாா்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த அந்த மாணவரின் தந்தை நாராயணசாமி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருபவா் என்பது குறிப்பிடத்தக்கது.இணையதளம் முடக்கம்: நீட் தோ்வு முடிவுகள் வெளியானவுடன் லட்சக்கணக்கானோா் ஒரே நேரத்தில் முடிவுகளை அறிய முற்பட்டதால் தேசிய தோ்வு முகமை இணையதளப் பக்கம் முடங்கியது பல மணி நேரங்களுக்கு முடங்கியது. இதனால் பல மாணவா்கள் தோ்வு முடிவுகளை அறிய இயலாமல் அவதிப்பட்டனா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews