Breaking

Tuesday, October 27, 2020

சித்தா, கால்நடை மருத்துவம் மாணவர் சேர்க்கை பாதிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு, கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்காததால், எம்.பி.பி.எஸ்., படிப்பு மட்டுமின்றி, சித்தா, கால்நடை மற்றும் துணை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வு நடைமுறையால், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில், அதிகம் சேர முடியவில்லை. ஆண்டுதோறும், 10க்கும் குறைவான மாணவர்களே சேரும் நிலை உள்ளது.எனவே, மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு இதுவரை, கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை, இந்த கல்வியாண்டிலேயே செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், எம்.பி.பி.எஸ்., - - பி.டி.எஸ்., படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சித்தா, கால்நடை மற்றும்துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் பாதித்துள்ளது.இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா தொற்று பரவல் காரணமாக, அனைத்து மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது, யோகா மற்றும்இயற்கை மருத்துவ படிப்பு, கால்நடை மருத்துவ படிப்பு, பி.பார்ம், பி.எஸ்சி., உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.ஆனால், எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., சேர்க்கை முடிந்த பிறகே, மற்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது வழக்கம். இதே நடைமுறை இந்தாண்டும் பின்பற்றப்படும்.அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு விவகாரத்தில், கவர்னர் நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார்.இவ்வாறு, அவர்கள் கூறினர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog