அரசு பள்ளிக்கு இலவச மினி பேருந்து :முன்னாள் மாணவர்கள் வழங்கினர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 05, 2020

Comments:0

அரசு பள்ளிக்கு இலவச மினி பேருந்து :முன்னாள் மாணவர்கள் வழங்கினர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
செய்யூர் தாலுகா சூனாம்பேடு ஊராட்சி அரசு பள்ளி கடந்த 1936-ம் ஆண்டு அரசு அங்கீகாரத்துடன் நடுநிலைப் பள்ளியாக துவங்கியது. பின்னர் 1971-ல் உயர்நிலைப் பள்ளியாகவும், 2001-ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்ந்தது.நாளடைவில் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து, தற்போது 200 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இதற்கு வாகன போக்குவரத்து இல்லாததே என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதை கருத்தில் கொண்டு, முன்னாள் மாணவ-மாணவிகள் ஒன்றுசேர்ந்து, அப்பள்ளிக்கு ₹20 லட்சத்தில் புதிய மினி பேருந்து ஒன்றை வழங்க தீர்மானித்தனர். நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவ-மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் விடுதலை செழியன் தலைமையில், மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், எஸ்பி கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது முன்னாள் மாணவ-மாணவிகள் வழங்கிய இலவச மினி பேருந்தை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர். மேலும் பள்ளியின் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவ-மாணவிகள் சார்பில், முன்னாள் மாணவர் பேரவை கல்வி அறக்கட்டளை புதியதாக துவக்கப்பட்டது. இதன்மூலம் ஆண்டுதோறும் முன்னாள் மாணவர்கள் அளிக்கும் நிதியை, பள்ளி வளர்ச்சிக்காகவும் பேருந்து இயக்கத்திற்கும் பயன்படுத்த தீர்மானித்து உள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews