பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்கள் தோற்றுவித்தது - அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-2 ஆக பணிபுரிபவர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக தரம் உயர்த்துதல் -ஆணை வழங்குதல் - குறித்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் - நாள். 02.09.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 02, 2020

பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்கள் தோற்றுவித்தது - அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-2 ஆக பணிபுரிபவர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக தரம் உயர்த்துதல் -ஆணை வழங்குதல் - குறித்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் - நாள். 02.09.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள், சென்னை-6)
முன்னிலை: முனைவர்.பூ.ஆ.நரேஷ்
ந.க.எண்.8095/01/82/2019,நாள். 02.09.2020

பொருள்:
பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்கள் தோற்றுவித்தது - அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-2 ஆக பணிபுரிபவர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக தரம் உயர்த்துதல் -ஆணை வழங்குதல் - குறித்து.

பார்வை
1. அரசாணை (நிலை) எண்.26, பள்ளிக்கல்வி (ப.க.7(1))த்துறை நாள் 12.02.2019
2. அரசுக் கடிதம் எண்.735/ப.க.7(1)/2020-1,நாள் 20.01.2020
3. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்.8095/ வி1/ இ2/ 2019, நாள் 27.06.2019 மற்றும் 21.01.2020.
4. சென்னை உயர்நீதிமன்ற வழக்கு W.P.NO.6220& 7835/2019 மற்றும் WMP எண். 7070, 7071 & 8472/2019 ன்மீதான தீர்ப்பு நாள் 18.02.2020.
5. சென்னை உயர்நீதிமன்ற வழக்கு W.P.NO.19316, 22180820566/2019 மற்றும் WMP எண். 18786, 18789, 18795, 18799, 24041, 21452, 21455, 19804, 19800, 19801 & 19805/2019 ன்மீது தீர்ப்பு நாள் 24.01.2020,
6. முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள்.
பார்வை 1-ல் கண்டுள்ள அரசாணை மூலம் ஏற்கனவே அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட கணினி பயிற்றுநர் பணியிடங்கள் கணினி பயிற்றுநர் நிலை -2 ஆக மறு பெயரிட்டு, அவற்றில் பணிபுரிந்து வரும் கணினி பயிற்றுநர்கள் நிலை -2 பணியாளர்களை, மேற்படி அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள NCTE கல்வி தகுதிகளின்படியும் பார்வை 2ல் குறித்துள்ள அரசுக் கடிதத்தின்படியும் தகுதிவாய்ந்தோர் விவரங்கள் பார்வை 6-ல் குறித்துள்ள விவரப்படி முதன்மைக்கல்வி அலுவலர்களால் அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கீழ்க்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் கண்டவாறு பணியாற்றி வரும் தகுதிவாய்ந்த கணினி பயிற்றுநர் நிலை -2 பணியிடங்களை, பார்வை 1-ல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையின் அடிப்படையில் கணினி பயிற்றுநர்கள் நிலை -1 பணியிடமாக (ரூபாய் 36,900- 1,16,600 என்ற ஊதிய ஏற்ற முறையில் - (Level-18)) தரம் உயர்த்தி ஆணையிடப்படுகிறது.
மேற்படி பணியிடங்களில் கணினி பயிற்றுநர் நிலை 2ஆக பணிபுரிந்து வரும் இணைப்பில் கண்ட தகுதிவாய்ந்த நபர்களை, அவர்கள் பணிபுரிந்து வரும் அதே பள்ளியில் கணினி பயிற்றுநர்கள் நிலை 1-ஆக அரசு ஆணை எண்.-26 வெளியிடப்பட்ட நாளான 12.02.2019 முதல் தரம் உயர்த்தி இதன் மூலம் ஆணையிடப்படுகிறது. தரம் உயர்த்தப்பட்டுள்ள இணைப்பில் கண்ட ஆசிரியர்கள், அப்பணியிடத்தில் பணியேற்க அனுமதிக்கு முன், கீழ்க்காணும் நிபந்தனைகளை நிறைவு செய்யும் விவரங்களை அதாவது தரம் உயர்த்தப்பட்ட பணியிடத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்தவர்கள்தான் என்பதை சார்ந்த தலைமையாசிரியர்கள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

நிபந்தனைகள்
1. பட்டியலில் இடம்பெற்றுள்ள கணினி பயிற்றுநர்கள் (நிலை-2) தகுதிகாண் பருவம் மற்றும் பணிவரன்முறை முறையே முடிக்கப்பட்டுள்ளார்களா என்பதை தலைமையாசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2. பட்டியலில் இடம்பெற்றுள்ள கணினி பயிற்றுநர்கள் (நிலை-2) ஆக பணிபுரிபவர்கள் அரசாணை நிலை எண். 26 பள்ளிக்கல்வித்(பக7(1))துறை, நாள் 12.02.2019ல் பத்தி 1-ல் குறிப்பிடப்பட்டுள்ள NCTE விதிகளின்படி குறைந்தபட்ச சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களா என்பதை தலைமையாசிரியர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

3. பட்டியலில் இடம்பெற்றுள்ள கணினி பயிற்றுநர்கள் (நிலை-2) வெளிமாநில சான்று பெற்றிருப்பவர்கள் எனில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

4. பட்டியலில் இடம்பெற்றுள்ள கணினி பயிற்றுநர்கள் (நிலை-2) ஒரே ஆண்டில் இருவேறு பட்டங்கள் (Simultaneous Degree / Double Degree) பட்டப்படிப்பில் இரட்டைப்படிப்பு படித்தவர்களாக இருப்பின் அவர்களை நிலை1-ஆக பணியேற்க அனுமதிக்க கூடாது. 5. பட்டியலில் இடம்பெற்றுள்ள கணினி பயிற்றுநர்கள் (நிலை-2) 10+2+3 மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட், கல்வித்தகுதிகள் முறைப்படி பெற்றவர்களாக என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

6. பட்டியலில் இடம்பெற்றுள்ள கணினி பயிற்றுநர்கள் (நிலை-2) மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் இருப்பின் அவர்களை நிலை1-ஆக பணியேற்க அனுமதிக்க கூடாது. உடனடியாக சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர் மூலம் இவ்வியக்ககத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

7. பட்டியலில் இடம் பெற்றுள்ள கணினி பயிற்றுநர்கள் நிலை -2 மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்று தண்டனைக்காலம் முடிவடையாத நிலையில் உள்ளவர்களை நிலை-ஆக பணியேற்க அனுமதிக்க கூடாது.

8. பட்டியலில் இடம் பெற்றுள்ள கணினி பயிற்றுநர்கள் நிலை 2ல் தலைமையாரிசியர் / முதன்மைக்கல்வி அலுவலரின் தவறான பரிந்துரையின் அடிப்படையில் தொழிற்கல்வி ஆசிரியர் (கணினி அறிவியல்) பெயர்கள் இடம் பெற்று இருந்தால் அவர்களை கணினி பயிற்றுநர் நிலை1ஆக பணியில் சேர அனுமதிக்கக் கூடாது.

9. பட்டியலில் இடம் பெற்றுள்ள கணினி பயிற்றுநர்கள் (நிலை-2) பணிபுரிபவர்கள் பட்ட மேற்படிப்பு மற்றும் பி.எட்., படிப்புகளில் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் படி அரசாணையில் தெரிவிக்கப்பட்டவாறு குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றுள்ளாரா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்,

10. பட்டியலில் இடம்பெற்றுள்ள கணினி பயிற்றுநர்கள் (நிலை-2) ஆகப் பணிபுரிபவர்களில் பட்டப்படிப்புகளில் இணைத்தன்மை (Equivalency) பெற்றுள்ளார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

11. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலிலுள்ள நபர்கள் யாராவது இளங்கலை / முதுகலையில் (கணினி அறிவியல் சார்ந்து) வெவ்வேறு பாடங்கள் பயின்றதன் காரணமாக வழக்கு தொடுத்து அவ்வழக்கு நிலுவையிலிருப்பின் அவர்கள் சார்பில் ஏற்கனவே இணை இயக்குநரால் (தொழிற்கல்வி) திருத்திய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதால் அவர்கள் சார்பில் கணினி பயிற்றுநர் நிலை | ஆக பணியில் சேர அனுமதித்தாலும் அவர்கள் வழக்கினை திரும்ப பெற்ற பின்னர்தான் தலைமையாசிரியர் ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேலே வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்துவிள விவரத்தை உறுதிப்படுத்திக் கொண்டு தரம் உயர்த்தப்பட்ட கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடத்தில் பணியேற்க அனுமதிக்க வேண்டும். உரிய பணியேற்பு அறிக்கையை சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இணைப்பு:
கணினி பயிற்றுநர் நிலை-1ஆக தரம் உயர்த்துபவர்கள் பட்டியல்
இணை இயக்குநர் (தொழிற்கல்வி)
பெறுநர்
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் (முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக)
நகல்
1. முதன்மைக்கல்வி அலுவலர்கள்
2. மாவட்டக்கல்வி அலுவலர்கள்
3. சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் (முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக)
4. சம்பந்தப்பட்ட மாவட்ட | சார்நிலை கருவூல அலுவலர்கள் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக)
CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews