உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து, பெற்றோர் புகார் அளிக்க, தனியாக, 'இ - மெயில்' முகவரி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அனுமதிமேலும், பள்ளிகளின் சார்பில் பாடங்கள் மற்றும் தேர்வுகள் நடத்த, பள்ளி கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. இதற்காக மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கவும், அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல பள்ளிகள், உயர் நீதிமன்றம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அனுமதியை மீறி, அதிக கட்டணம் கேட்டு, பெற்றோரை வற்புறுத்துவதாக, புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, வரம்பு மீறும் பள்ளிகள் குறித்து புகார் தருவதற்கு, தனியாக, 'இ - மெயில்' முகவரிகளை, பள்ளிக் கல்வி முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சென்னை உயர் நீதிமன்றத்தின், ஜூலை, 17ல் பிறப்பித்த உத்தரவை மீறி, தனியார் பள்ளிகள், 40 சதவீதத்துக்கு மேல் கட்டணம் கேட்டு, பெற்றோரை வற்புறுத்தக் கூடாது. இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரின் கடிதத்தில், ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல் தொடர்பாக, பள்ளிகளுக்கு சுற்றறிக்கையும், ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, 40 சதவீதத்துக்கு மேல், கட்டணம் செலுத்துமாறு, பெற்றோரை வற்புறுத்தும் பள்ளிகள் மீது, பெற்றோர் புகார் தெரிவிக்கலாம்.ஆதாரம்இதற்காக, ceokancheepuram@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் தங்கள் புகார்களை, இ - மெயிலிலோ அல்லது காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலக முகவரிக்கோ, உரிய ஆதாரங்களுடன் அனுப்பலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 40%-க்கும் மேல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உரிய அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாறியுள்ளன. மேலும் தனியார் பள்ளிகள் இயங்காத நிலையில், 100% கட்டணத்தை உடனடியாக கட்டுமாறு வந்த புகாரின் அடைப்படையில், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி, தனியார் பள்ளிகள் கட்டணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 100 சதவீத கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த தனியார் பள்ளிகள் பெற்றோர்களை 100% கட்டணத்தை வசூலிக்க வற்புறுத்தினர் என ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கும் உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் எத்தனை பள்ளிகள் இவற்றில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பான சரியான தகவலானது பள்ளிக்கல்வித்துறை தரப்பில் கொடுக்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக வரும் செப்டம்பர் 7ம் தேதி பள்ளி கல்வித்துறை செயலாளர் காணொளி காட்சி மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் நேரடி வழக்கில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது இந்த விவகாரமானது சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் பெற்றோர்கள் நேரடியாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் அனுப்பினால், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எதெந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விரிவான தகவலானது தற்போது திரட்டப்பட்டு வருகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups