JEE தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 11, 2020

JEE தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
J.E.E தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலுவதற்கு J.E.E நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பின்னர் கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுவதும் 660 மையங்களில் மாணவர்கள் தேர்வெழுதினர். எனினும் தேர்வுக்காக பதிவு செய்தவர்களில் பலர் தேர்வு எழுதவில்லை என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், J.E.E தேர்வுகளை வெற்றிகரமாக நடத்த உதவியதாக மாநில அரசுகள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், முடிவுகளை jeemain.nta.nic.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews