சென்னை மாநகராட்சி சார்பில், மாநகராட்சிப் பள்ளி கணித ஆசிரி யர்களுக்கான சிறப்பு பயிற்சிப் பட்டறை நேற்று முன்தினம் நடை பெற்றது. மாநகராட்சி ஆணை யர் கோ.பிரகாஷ் இதைத் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி பள்ளிகளில் தர மான உள்கட்டமைப்புகள் ஏற் படுத்தப்பட்டு, கற்றல் கற்பித் தலுக்கான ஸ்மார்ட் வகுப்பறை கள் மற்றும் அப்பள்ளிகளில் மேம்பட்ட விளையாட்டு வசதி கள் ஏற்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ‘சிட்டிஸ்’ (CITIIS) என்ற திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. கற்றல் கற் பித்தலில் புதிய நுட்பங்களை கையாளுவதும், மாணவர் களுக்கு விருப்பமான பள்ளியாக மாநகராட்சி பள்ளி களை மாற்றுவதுமே இத்திட்டத் தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சியின் தொடக்க, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணித ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நேற்று முன் தினம் நடைபெற்றது. அதை மாநகராட்சி ஆணையர் கோ.பிர காஷ் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, “சென்னை மாநகராட்சிப் பள்ளி களை ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றுவதற்கான தொடக்க மாக ‘சிட்டிஸ்’ திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. ஆசிரி யர்கள் இதுபோன்ற பயிற்சி களில் ஆர்வத்துடன் பங் கேற்று பயிற்சி பெற்று, அதை மாணவர்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல அலுவலர் திருமுரு கன், உதவி கல்வி அலுவலர் கள் முனியன், நளினா குமாரி, சைதாப்பேட்டை மகளிர் மேல் நிலைப்பள்ளி முதல்வர் பத்மஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கற்றல் கற்பித்தலில் புதிய நுட்பங்களை கையாளுவதும், மாணவர்களுக்கு விருப்பமான பள்ளியாக மாநகராட்சி பள்ளி களை மாற்றுவதுமே ‘சிட்டிஸ்’திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups