கல்லூரி மாணவர்கள் அரியர் பாடங்களிலும் தேர்ச்சி என்ற அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு, யூஜிசி மற்றும் ஏ ஐ சி டி இ 2 வாரங்களில்பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று கூறி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்ட 2 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அரியர் பாடங்களில் தேர்ச்சி குறித்து, யூஜிசி விதிகளுக்கு முரணாக இல்லாத பட்சத்தில் அரசு முடிவெடுக்கலாம் என்றும், பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் தமிழக அரசு வாதிட்டது.