'தமிழகத்தில், புதிதாக துவங்க உள்ள, 11 அரசு மருத்துவக் கல்லுாரி களிலும், வரும் கல்வியாண்டில், மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருவள்ளூரில் நேற்று நடந்தது. முதல்வர் இ.பி.எஸ்., பங்கேற்று, அரசு தோட்டக்கலை பண்ணை உள்ளிட்ட, 14.94 கோடி ரூபாய் மதிப்பிலான ஏழு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
7.23 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை துவக்கி வைத்தார்.கட்டுமான பணிபின், முதல்வர் இ.பி.எஸ்., கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டம், சென்னைக்கு அருகே இருப்பதாலும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கியிருந்ததாலும், ஆரம்பத்தில், கொரோனா தொற்று அதிகம் இருந்தது.
தமிழக அரசின் வழிமுறைகளை, மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் இணைந்து செயல்படுத்தியதால், தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.இம்மாவட்டத்தில், குடிமராமத்து பணி காரணமாக, 50 சதவீத ஏரிகள் நிரம்பி உள்ளன. வரும் மழைக் காலத்திற்குள், மீதமுள்ள ஏரிகளும் நிரம்பி விடும்.திருவள்ளூர் உள்ளிட்ட, 11 மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லுாரிகளுக்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல், ௧௧ மருத்துவக் கல்லுாரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.தொழில் துவங்குவதற்கான முன்னுரிமை வரிசையில், தமிழகம், 16ம் இடத்தில் உள்ளது.
முதல், 10 இடங்களுக்குள் கொண்டு வரும் வகையில், தொழிற்சாலை துவங்க அனுமதி வழங்க, ஒற்றை சாளர முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.கையாடல்தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த, ரங்கராஜன் கமிட்டி கொடுத்த அறிக்கையை படித்து பார்த்த பின், அதை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.மத்திய அரசு, விவசாயி களுக்கு வழங்கிய சலுகையை, சிலர் தவறாக பயன்படுத்தி, கையாடல் செய்துள்ளனர். இதற்காக, தமிழக அரசு சிறப்பு குழு அமைத்து, கையாடல் பணத்தை மீட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.அமைச்சர்கள், பெஞ்சமின், பாண்டியராஜன், கலெக்டர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.நான் என்ன நடிகனா...? முதல்வர் இ.பி.எஸ்., மேலும் கூறுகையில், ''தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், எனக்கு விளம்பரம் கிடைப்பதில்லை என, பலரும் கூறுகின்றனர். நான் என்ன சினிமா நடிகரா... விளம்பரம் கிடைக்க; நான் சாதாரண விவசாயி மகன் தானே... என, அவர்களிடம் கூறினேன்,'' என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups