பி.ஆர்க்., 'அட்மிஷன்' இன்று பதிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 08, 2020

பி.ஆர்க்., 'அட்மிஷன்' இன்று பதிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பு பெற்ற கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேருவதற்கு, தமிழக உயர் கல்வி துறை சார்பில், 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்படுகிறது. இதற்கான, ஆன்லைன் பதிவுகள் முடிந்துள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. வரும், 17ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இந்நிலையில், கட்டட அமைப்பியல் படிப்பான, பி.ஆர்க்., சேருவதற்கு, தனியாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான, ஆன்லைன் பதிவு, நேற்று துவங்குவதாக இருந்தது. ஆனால், நிர்வாக பிரச்னையால் துவங்கவில்லை. இன்று அதிகாலை முதல், ஆன்லைனில் விண்ணப்ப பதிவு துவங்கப்படும் என, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்லுாரிகளின் எண்ணிக்கை, கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்து விபரங்களும், இன்று, www.tneaonline.org என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக, அதிகாரிகள் கூறினர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews