பள்ளிக்கல்வி - மத்திய அரசுத் திட்டம் - 2020-2021 ஆம் கல்வியாண்டு - 9 முதல் 12ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதம் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறும் தகுதியுடையவர்களின் பெயர் பட்டியல் அனுப்பக் கோருதல் - சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தெழிற்கல்வி) செயல்முறைகள் - நாள்-26.08.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 03, 2020

பள்ளிக்கல்வி - மத்திய அரசுத் திட்டம் - 2020-2021 ஆம் கல்வியாண்டு - 9 முதல் 12ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதம் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறும் தகுதியுடையவர்களின் பெயர் பட்டியல் அனுப்பக் கோருதல் - சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தெழிற்கல்வி) செயல்முறைகள் - நாள்-26.08.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தெழிற்கல்வி) செயல்முறைகள் சென்னை-600006
ந.க.எண்.21206/இ/இ1/2020 நாள்-26.08.2020
பொருள் :
பள்ளிக் கல்வி - மத்திய அரசுத் திட்டம் - 2020-2021 ஆம் கல்வியாண்டு - 9 முதல் 12ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதம் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறும் தகுதியுடையவர்களின் பெயர் பட்டியல் அனுப்பக் கோருதல் - சார்ந்து.

பார்வை:
சென்னை - 6. நிதிக் கட்டுப்பட்டு அலுவலரின் செயல்முறைகள்
நக.எண். 14494,11/22/2019, நாள். 18.05.2020. பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரைசமஸ்கிருதம் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 200 மாணவ / மாணவியர்கட்கு மத்திய அரசால் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுவருகின்றது.

தற்போது 2020-2021 ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலைமேல்நிலை பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சமஸ்கிருதம் பயிலும் திறனுள்ள மாணவமாணவியருக்கு மத்திய அரசால் அளிக்கப்படும் உதவித்தொகை பெற தகுதியுள்ளோர் பட்டியலை தயாரிக்கும் போது கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தற்போது சமஸ்கிருதம் பயிலும் மாணவ மாணவியர்கள் சென்ற 2019-2020 ஆம் கல்வியாண்டுகளில் முறையே 8,9,10,11 வகுப்பில் சமஸ்கிருதத்தில் 60% மேல் பெற்ற அதிகபட்ச மதிப்பெண்களின் அடிப்படையில் 2020 -2021ஆம் கல்வியாண்டிற்குவரிசைப்படுத்தல் வேண்டும். 2 2019-2020 ஆம் கல்வியாண்டுகளில் முறையே 8,9,10,11 வகுப்பில் சமஸ்கிருதத்தில் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பின் மாணவர்களின் பெயரினை அகரவரிசையில் வரிசைப்படுத்தல் வேண்டும்

3. 2019-2020 ஆம் கல்வியாண்டில் 9.10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் சமஸ்கிருத கல்வி உதவித் தெகை பெற்ற மாணவ, மாணவியர்கள் முறையே இக்கல்வியாண்டில் முறையே 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உதவித்தெகை பெறத் தகுதியுடையவர்கள்

4. மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து பெறப்படும் பட்டியலை ஒருங்கிணைத்து வருவாய் மாவட்ட அளவில் மாணவ, மாணவியர்கள் சமஸ்கிருதத்தில் 60% மேல் பெற்ற அதிகபட்சமதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமைப்படி வரிசைப்படுத்தல் வேண்டும்.

5. முதன்மைக் கல்வி அலுவலரின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் பள்ளிகள் இல்லையன்றாலும், அதற்கான இன்மை அறிக்கையினை இவ்வியக்கத்திற்கு அனுப்புதல் வேண்டும்.

மேற்கண்ட அறிவுதைளை பின்பற்றி 2020-2021 ஆம் கல்வி யாண்டில் சமஸ்கிருத கல்வி உதவி தொகை பெறத் தகுதியுள்ள 9:10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (MS word format Tau.Marutham font) பூர்த்தி செய்து 30.092020- க்குள் careinderenic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதில் கையெப்பம் இட்டு இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு படிவம்
ஓம் முனைவர்பூஆதரேஷ்
இணை இயக்குநர் தொழிற்கல்வி)
பெறுநர்.
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews