கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், தங்கள் விருப்பத்தின் பேரில் நேரில் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
செப். 30-ம் தேதி வரை கரோனா ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஊரடங்கில் 4-ம் கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில் கல்வி குறித்த முக்கிய அம்சங்கள்:
* செப்டம்பர் 30 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
* ஆனால் ஆன்லைன்/ தொலைநிலை கற்றல் முறைகளைத் தொடர அனுமதிக்கலாம், ஊக்குவிக்கலாம்.
* ஆன்லைன் கற்பித்தல்/ தொலைவில் இருப்போருக்கு கலந்தாய்வு மற்றும் அவை தொடர்பான பணிகளுக்கு 50 சதவீதம் வரையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களைப் பணிக்கு வரவழைக்க மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் அனுமதிக்கலாம்.
* கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் மட்டும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு, தங்கள் விருப்பத்தின் பேரில் நேரில் பள்ளிக்கூடங்களுக்கு வர அனுமதிக்கலாம். அவர்களின் பெற்றோர்/ காப்பாளர் எழுத்துபூர்வமாக ஒப்புதல் அளிப்பதன் அடிப்படையில் மட்டுமே இதை அனுமதிக்க வேண்டும்.
* உயர்கல்வி நிறுவனங்கள் ஆய்வக/ பரிசோதனைப் பணிகள் தேவைப்படும் ஆராய்ச்சி மாணவர்கள் (பிஎச்டி) மற்றும் தொழில்நுட்ப மற்றும் பணிமுறைப் படிப்புகளைச் சேர்ந்த முதுநிலை மாணவர்களுக்கு மட்டுமே நிலைமையை ஆய்வு செய்தும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளை மனதில் கொண்டும் உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பிறகு உயர் கல்வித்துறையால் இவை அனுமதிக்கப்படும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups