சுதந்திரமான கல்வி கிடைக்குமிடம்! - அரசு பள்ளியில் மகளை சேர்த்த ஆசிரியர் பெருமிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 27, 2020

சுதந்திரமான கல்வி கிடைக்குமிடம்! - அரசு பள்ளியில் மகளை சேர்த்த ஆசிரியர் பெருமிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''அரசு பள்ளியில் குழந்தைகள் ஆடி பாடி, சந்தோஷமாக கல்வி கற்கின்றனர்,'' என தனது குழந்தையை அரசு நடுநிலைப்பள்ளியில் சேர்த்த ஆசிரியர் கனகராஜ், பெருமிதத்துடன் தெரிவித்தார்.பசூர் ஊராட்சி, புதுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு இதே ஊரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கனகராஜ், தனது ஆறு வயது குழந்தை ஆஷா ஐராவதியை, ஒன்றாம் வகுப்பில் சேர்த்துள்ளார். ஆசிரியர் கனகராஜ் கூறுகையில், ''நான் காரமடை ஒன்றியம், ஆலத்தி வச்சினம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறேன். என் மனைவி காயத்ரி, சூலுார் ஒன்றியம், எம்.கணபதிபாளையம் நடுநிலைப்பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறார்.எங்கள் குழந்தையை, நான் வசித்து வரும் புதுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் சேர்த்துள்ளேன். இதே பள்ளியில்தான் நான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். எனது குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்தது குறித்து பலரும் ஏளனமாகவும், அங்கலாய்ப்புடனும் விசாரிக்கின்றனர். ஆனாலும் நான் எனது குழந்தைகளை, அரசு பள்ளியில் தான் படிக்க வைப்பதை பெருமையாக கருதுகிறேன்,'' என்றார்.பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா கூறுகையில், ''இப்பள்ளியில், கராத்தே, யோகா கற்றுத்தரப்படுகிறது. ஆசிரியர்கள் செலவில், ஒரு ஆட்டோ, தாசபாளையத்திலிருந்து பள்ளிக்கு இலவசமாக இயக்கப்படுகிறது. பெற்றோர் ஆசிரியர் கழக ஒத்துழைப்போடு, ஒரு ஆசிரியரை நியமித்து, ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்பிக்கிறோம். ஒரு ஆண்டுக்கு முன் நான் பொறுப்பேற்றபோது, 53 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, தற்போது 75 ஆக உயர்ந்துள்ளது,'' என்றார்.புதிதாக சேர்க்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் மற்றும் புத்தக பை வழங்கப்பட்டன. அரசு பள்ளிகளை புறக்கணித்துக் கொண்டே சென்றால், ஒரு கட்டத்தில் மூடப்பட்டு விடும். அப்பறம் ஏழை குழந்தைகள் எங்கு சென்று படிக்க முடியும். அரசு பள்ளிகளில், குழந்தைகள் அவர்களுடைய போக்கில் யதார்த்தமாக கல்வி கற்கின்றனர். சந்தோஷமாக ஆடிப்பாடி கல்வி கற்கின்றனர். குழந்தைகளுக்கு அதுதான் தேவை.- கனகராஜ், அரசுப்பள்ளி ஆசிரியர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews