ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) - திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.09.2020 முதல் முழு அளவில் நடைமுறைப்படுத்துதல் - பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் செய்ய வேண்டியவை - தொடர்பாக - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 21, 2020

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) - திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.09.2020 முதல் முழு அளவில் நடைமுறைப்படுத்துதல் - பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் செய்ய வேண்டியவை - தொடர்பாக

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெறுநர்
திரு க.சு. கந்தசாமி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர், திருவண்ணாமலை. அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் (DDOs) திருவண்ணாமலை மாவட்டம்.
ந.க.எண்.1675-2016-கே1, நாள் 20.08.2020
அய்யா/அம்மையீர்,
பொருள்
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (IFHRMS) - திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.09.2020 முதல் முழு அளவில் நடைமுறைப்படுத்துதல் - பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் செய்ய வேண்டியவை - தொடர்பாக. பார்வை
1. மாவட்ட ஆட்சித் தலைவர், திருவண்ணாமலை அவர்களின் கடித ந.க.எண். 1675-2016-அ1, நாள் 09.06.2020.
2. ஆணையர், கருவூல கணக்குத் துறை, சென்னை அவர்களின் மின்னஞ்சல் நாள் 24.07.2020 மற்றும் காணொளி காட்சி கூட்ட நாள் 30.07.2020. ‘ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம்' (Integrated Financial and Human Resource Management System-IFHRMS) என்ற திட்டம் பல்வேறு கட்டங்களில் தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்தப்பட்டு, தற்போது ஆறாவது கட்டமாக 01 09-2020 முதல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், விழுப்புரம், கோவை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மேற்படி திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பார்வையில் காணும் காணொளி காட்சி கூட்டத்தில் கருவூல கணக்குத்துறை ஆணையர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
01.09.2020 முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் IFHRMS திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், நாளது தேதியில் நடைமுறையில் இருக்கும் Web Pay Roll மற்றும் ATBPS சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு IFHRMS மூலம் மட்டுமே பட்டியல் சமர்பிக்க முடியும். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும் (DDOS) கீழ்காணும் விவரங்களை IFHRMS மென் பொருளில் சரியாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* Data validation-ல் அலுவலக விவரம் (Office Details), பணியிட விவரம் (Post Details) மற்றும் பணியாளர் விவரம் (Employee Details) சரியாக உள்ள தை உறுதி செய்து கொள்ளுதல்.
* E-Payroll (ATPBS) மூலமாக ஊதியம் பெறும் அனைத்து பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களும் IFHRMS மென்பொருளில் இருப்பதை 100% உறுதிசெய்துகொள்ள வேண்டும். SI துறை தலைவரிடமிருந்து (HOD) IFHRMS மென்பொருள் மூலமாக வரப்பெற்ற 2020-2021 ஆம் நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கீடினை (Budget Allotment), மாவட்ட அளவிலான நிதி கட்டுப்பாட்டு அலுவலர்கள் (Budget Controlling Officer), தங்களின் கீழ்நிலை கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு நிதி பகிர்மானம் பகிர்ந்தளிக்கப்பட்டதை உடனடியாக உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* ஜுலை 2020 மாத சம்பளப் பட்டியல் e-Payroll-ல் உள்ளதை போன்று, அனைத்து பணியாளர்களுக்கும் Pay, DA, HRA, MA, GPF/CPS, NHIS, FBF, FA, etc,.. போன்றவை IFHRMS மென்பொருள் சம்பள பட்டியலில் சரியாக உள்ளதா என்பதையும், மேலும் e-Payroll-ல் உள்ள தைப் போன்று Bill Gross, Deduction and Net Amount IFHRMS-ல் வருவதை உறுதி செய்ய வேண்டும்.
* பயனாளர்களின் வங்கி கணக்கு எண் மற்றும் IFSC Code ஆகியவற்றை சரிபார்த்துக்கொள்ளுதல் வேண்டும், ஏதேனும் மாறுதல் இருந்தால் IFHRMS-ல் Bank Details Updation-ல் மாற்றம் செய்யலாம்.
* NSD பிடித்தம் தொடர்பான விவரங்களை சரிபார்க்க வேண்டும். * அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உள்ள செயலர்/தாளார்களுக்கு Sanctioner என்ற அளவில் IFHRMS மென்பொருளில் உள்ளதை அவர்களுக்கு தெரிவித்து, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஊதியப் பட்டியல்கள் IFHRMS மூலமாக தயார் செய்வதை தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
முதியோர் ஓய்வூதிய திட்ட ஓய்வூதிய பட்டியல்கள் (OAP), டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்ட பட்டியல்கள் (MLR), மகளிர் திருமண நிதி உதவி திட்ட பட்டியல்கள், வேலை வாய்ப்பற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி உதவி திட்ட பட்டியல்களில் உள்ள பயனாளிகளின் விவரங்களை IFHRMS மென்பொருளில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டதை தொடர்புடைய துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) / பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
* பிழைப்பூதியம் மற்றும் தற்காலிக ஓய்வூதியம் பெற்று வரும் பணியாளர்களின் விவரங்களை IFHRMS மென்பொருளில் பதிவேற்றம் செய்து, அவர்களுக்கான பட்டியல்களை IFHRMS மென்பொருளில் தயார் செய்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும். * ஒரே அலுவலகத்தில் (Singlc oflicc) அதிகளவிலான பணியாளர்கள் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட வன அலுவலகம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலகம், திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்கள் தனி கவனம் செலுத்தி மேற்காணும் பணிகளை செய்ய வேண்டும். * மாவட்ட அளவிலான துறை அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சார் அலுவலகங்கள் மேற்காணும் பணிகளை உரிய நேரத்தில் முடிப்பதை கண்காணிக்க வேண்டும்.
* ATBPS -ல் Salay and Non Salary பட்டியல்களும், ஆகஸ்டு 2020 மாதத்திற்கான சம்பளப் பட்டியல்கள் 24.08.2020-க்கு மேல் ஏற்கப்படமாட்டது.
01.09.2020 முதல் IFHRMS மூலம் தயாரிக்கப்படும் பட்டியல்கள் online மூலம் கருவூலத்திற்கு அனுப்பப்பட்டவுடன் (அரசு வேலை நாட்களில் மட்டும் அனுப்புதல் வேண்டும்). மேற்படி தயாரிக்கப்பட்ட பட்டியல்களை TNTC 70 பதிவேட்டில் பதிந்து உரிய விவரங்கள் மற்றும் வில்லை எண்ணுடன் (IFHRMS Token Number) கீழ்காணும் இணைப்புகளுடன் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கையொப்பத்துடன் கருவூலத்தில் சமர்பிக்கப்படவேண்டும். 1. SALARY BILL:
| 1 |Enfacement Slip (Payroll - Reports) | 2 | Treasury Bill Salary Claims (Pay Roll - Reports)
3 | Pay Statements (Login – Reports or Pay Roll – Reports
| → Pay Statement (Regular Run)) | Deduction Schedules (Pay Roll > Reports) TECS Data Report After Bill Generation (Payroll > Reports) 2. NON- SALARY BILL:
| Detailed Bill (Bills > Print (With All Attachments)
மேலும், பட்டியலுடன் உரிய இணைப்புகள் (செயல்முறை ஆணைகள், இரசீதுகள், உரிய அரசாணைகள், முதலியன) இணைக்கப்பட வேண்டும்.
மேற்படி சமர்ப்பிக்கப்படும் பட்டியல்கள், இதற்கு முன்னர் WEB PAYROLL/ ATBPS மூலம் சமர்பிக்கப்பட்டு காசக்கப்படவில்லை என உரிய பணம் பெற்று வழங்கும் அலுவலரால் சான்றிக்கப்பட வேண்டும்.
தமிழக அரசின் திட்டமான ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தினை திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.09.2020 முதல் சிறப்பாக நடைமுறைப்படுத்திடும் பொருட்டு அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும் தங்களது ஒத்துழைப்பினை நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவலர்
திருவண்ணாமலை
நகல்
1. ஆணையர், கருவூலக் கணக்குத்துறை, அம்மா வளாகம், சென்னை .
2. மண்டல இணை இயக்குநர், கருவூல கணக்குத்துறை, வேலூர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews