ஒருங்கிணைந்த கல்வி - கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழி வளங்களைப் பயன்படுத்திட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டுதல் தொடர்பான அறிவுரைகள் - சார்பு - கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 20.08.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 21, 2020

ஒருங்கிணைந்த கல்வி - கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழி வளங்களைப் பயன்படுத்திட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டுதல் தொடர்பான அறிவுரைகள் - சார்பு - கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 20.08.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
முன்னிலை : து.கணேஷ்மூர்த்தி, எம்.ஏ., பி.எட்.,
ந.க.எண்:1177/QMT/SS/2020-21 நாள்: 20.08.2020
பொருள் : ஒருங்கிணைந்த கல்வி - சேலம் மாவட்டம் - கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழி வளங்களைப் பயன்படுத்திட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டுதல் தொடர்பான அறிவுரைகள் - சார்பு

பார்வை
1. அரசாணை நிலை எண்...65 பள்ளிக்கல்வித்துறை, நாள்..29.07.2020
2. சேலம் முதன்மைக் கல்வி அலுவலரின் நேரடி அறிவுரை, நாள்.. 17.08.2020
மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்பதற்கு ஏதுவாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, கல்வி தொலைக்காட்சியில் ‘வீட்டுப்பள்ளி' வாயிலாக பாடங்கள் கற்பிக்கும் புதிய காட்சிவழிக் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது. வகுப்பு மற்றும் பாடவாரியாக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளில் எவ்வாறு வகுப்புகள் நடத்தப்படுகின்றதோ, அதே வகையில் கல்வி தொலைக்காட்சியில் வார நாட்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

1. சனிக்கிழமைகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடையும்-விடையும் என்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியும், ஞாயிற்றுக் கிழமைகளில் கலை சார்ந்த நிகழ்ச்சிகளும் கல்வி தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்பப்படுகிறது. ஞாயிற்று கிழமைகளில் மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகள் முடியும் வரை NEET / JEE பாடங்கள் சேர்த்து ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் அலைவரிசைகள் மற்றும் நேரம் பற்றிய விபரங்கள் அட்டவணையாக இணைப்பில் தரப்பட்டுள்ளது. . மேலும், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக முதல் நாள் ஒளிபரப்பப்படும் காணொலி பாடங்கள் மறுநாள் கல்வி தொலைக்காட்சியின் Youtube Channel - www.youtube.com/c/kalvitvofficial மற்றும் இணையதளத்தில் www.kalvitholaikaatchi.com பதிவேற்றம் செய்யப்படும்.

2. 1ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான ஒளிபரப்பு அட்டவணை பள்ளி சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து வர இயலாத நிலையில் மாணவர்கள் கற்றல் செயல்பாட்டினை தொடர்ந்து மேற்கொள்ளவும், கற்றலின் போது ஏற்படும் சந்தேகங்களை உடன் நிவர்த்தி செய்திடவும் கீழ்காணும் வழிகாட்டுதல்களை மாணவர்களின் நலன்கருதி சிறப்பான முறையில் செயல்படுத்திட பள்ளித் தலைமையாசிரியர்கள், வகுப்பாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

3. மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களைக் கல்வி தொலைக்காட்சியின் ‘வீட்டுப்பள்ளி' வாயிலாக வீட்டிலிருந்தே மாணவர்கள் படித்திடவும், அதில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை குறுஞ்செய்தி / Whatsapp மூலம் தொடர்பு கொண்டு உடனுக்குடன் களைந்திடவும் உரிய நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள், வகுப்பாசிரியர் மற்றும் பாட ஆசிரியர்கள் கொண்ட Whatsapp குழு ஒன்றினை வகுப்பு வாரியாக பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் ஏற்படுத்திட வேண்டும். இதனைத் தலைமையாசிரியர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

4. மாணவர்கள் மற்றும் மாணவிகள் எனத் தனித்தனிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். Whatsapp வசதி இல்லாத மாணவர்களுக்கு குறுஞ்செய்தி/அலைபேசி மூலம் அவர்களின் பாடம் சார்ந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்திட ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

5. கல்வித் தொலைக்காட்சியின் அட்டவணையின்படி, அதில் ஒளிபரப்பப்படும் பாடம் சார்ந்த தகவல்களை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து கல்வித் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும் VIDEO LESSON-ஐ பார்த்திட மாணவர்கள் தயார்நிலையில் இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

6. 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குரிய அனைத்து பாடப்புத்தகங்களிலும் உள்ள QR Code-ல் Audio மற்றும் Video பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை மாணவர்கள் தங்கள் Smart Phone / Laptop மூலம் Diksha App வழியாக பயன்படுத்துவதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டுதல் வேண்டும்.

7. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Video பாடங்கள் மாணவர்களுடைய மடிக்கணினிகளில் பதிவிறக்கம் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான பாடநூல்களும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, 12ஆம் வகுப்பு மாணவர்களை Video பாடங்கள் மூலம் பாடநூல்களில் உள்ள பாடப்பகுதிகளை படித்திடவும், அதில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் களைந்திடவும் ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

8. அனைத்து வேலைநாட்களிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இணையதளம், QR Code மற்றும் கல்வித் தொலைக்காட்சி வழியாக மாணவர்கள் மேற்கொள்ளும் கற்றல் பணியினை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து பின்னூட்டம் (Feedback) வழங்கிட வேண்டும். மேலும், இச்செயல்பாட்டினை ஆசிரியர்கள் தனிப்பதிவேட்டில் பதிவு செய்து பராமரித்திடவும், வகுப்புவாரியான அறிக்கையினை தலைமையாசிரியரிடம் தினசரி சமர்ப்பித்திடவும் வேண்டும்.

9. வகுப்பு வாரியாக உருவாக்கப்பட்டுள்ள Whatsapp குழுக்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கான கற்றல் வளங்களை தொடர்ந்து பகிர்ந்திடவும், அவர்களின் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்திடவும் வேண்டும்.

10. மாணவர்களை கற்றலில் முழுமையாக ஈடுபடுத்திட, பாடப்பகுதி சார்ந்த ஒப்படைவுகள் (Assignment), பயிற்சித்தாள்கள் (Worksheet), தொடர் பணிகள் ஆகியவற்றை வழங்கிடவும், வழங்கப்பட்ட ஒப்படைவுகளை உடனுக்குடன் மதிப்பீடு (Evaluation) செய்து தொடர்ந்து கண்காணித்து மாணவர்களின் கற்றலில் முன்னேற்றத்தை ஏற்படுத்திடவும், ஒப்படைவுகளை அனுப்ப இயலாத நிலையில் அதை பாதுகாப்பாக வைத்து பள்ளி திறக்கும் போது சமர்ப்பித்திடவும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

11. ஒவ்வொரு பாடப்பகுதியையும் மாணவர்கள் கற்ற பிறகு அவர்களின் கற்றல் விளைவுகளை கண்டறிய மாணவர்களுக்கு உரிய வினாத்தாள்கள் மற்றும் பயிற்சித்தாள்களை (Worksheets) அரசாணை நிலை எண்..65 பள்ளிக்கல்வித்துறை, நாள்...29.07.2020ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு அனுப்பி சம்பந்தப்பட்ட ஆசிரியர் மதிப்பீடு செய்யலாம்.

12. மொழிப்பாடப் பயிற்சிகளுக்கு உச்சரிப்பு மற்றும் வாசிப்பு திறனை மேம்படுத்த ஆசிரியர் மற்றும் மாணாக்கர் குரல் பதிவு (Voice Recording) அல்லது வீடியோ பதிவு (Video Recording) பயன்படுத்தி கற்றல் மற்றும் மதிப்பீட்டுப் பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

13. ஒவ்வொரு பாடப்பகுதிக்குரிய செயல்பாடுகளையும் மாணவர்கள் முடித்த பிறகு ஆசிரியர் அவர்களைத் தொடர்பு கொண்டோ / குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ மாணாக்கரின் முன்னேற்றம் குறித்த தங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவித்து இணைய வழி / தொலைக்காட்சி வழி கற்றலை ஊக்குவிக்க வேண்டும்.

14. ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து உரிய பதிவேடுகளில் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.

15. பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைய வழி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் ஏற்படுத்திட வேண்டும்.

16. பள்ளித் தலைமையாசிரியர் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு மாணவர்களின் இணையவழிக் கற்றல் / கல்வித்தொலைக்காட்சி பாட வகுப்புகள் சார்ந்து கருத்துக்கள் கேட்டறிந்து அதனைப் பதிவு செய்து தொகுப்பறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

17. பள்ளித் தலைமையாசிரியர் வாரம் ஒருமுறை ஆசிரியர்களிடம் மாணவர்களின் கற்றல் குறித்து மீளாய்வு செய்து பதிவேட்டில் பதிவு செய்து ஆய்வு அலுவலரின் பார்வைக்கு சமர்ப்பித்திடல் வேண்டும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும் சிறப்பான முறையில் மேற்கொள்ளவும், எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படவும் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இத்தகவலை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி பதிவேட்டில் பராமரித்திடவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுசார்ந்து பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை குறுவளமைய பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்காணித்து வாரந்தோறும் தங்கள் குறுவளமையத்திற்குட்பட்ட பள்ளிகளில் மேற்காண் செயல்பாடுகளில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கையை குறுவளமைய அளவில் தொகுத்து வட்டார வளமையம் மூலம் மாவட்டத்திட்ட அலுவலகத்திற்கு அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற்கண்ட செயல்பாடுகளைக் கண்காணித்து அதன் விரிவான அறிக்கையினை 28.08.2020 அன்று பிற்பகல் 03.00 மணிக்குள் சமரிப்பித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெறுநர்
1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், சேலம் மாவட்டம்
2. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், சேலம் மாவட்டம்
3. அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள், சேலம் மாவட்டம்
4. அனைத்து குறுவளமைய பள்ளித் தலைமையாசிரியர்கள் / குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சேலம் மாவட்டம்
5. அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ), சேலம் மாவட்டம்
நகல் :
1. முதன்மைக் கல்வி அலுவலர், சேலம் மாவட்டம் - கனிவுடன் அனுப்பலாகிறது.
2. முதல்வர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், உத்தம்சோழபுரம், சேலம் மாவட்டம் - கனிவுடன் அனுப்பலாகிறது.
இணைப்பு -1 கல்வித் தொலைக்காட்சி இணையதளம் குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் எழும் பொதுவான கேள்விகள்.
1. கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் நேரத்தில் பார்க்க தவறினால், வேறு ஏதாவது வசதிகள் உள்ளனவா?
ஆம். கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை பார்க்கத் தவறியவர்களுக்காக, கல்வித் தொலைக்காட்சி இணையதளம், Tn e-learn, TNTP, கல்வித் தொலைக்காட்சியின் YouTube சேனல் வாயிலாகவும் மேற்கண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து பயன்பெறலாம்.
மேலும், படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்காக, வினாக்களை இணைய தளத்தில் பதிவு செய்யலாம். கல்வித் தொலைக்காட்சியின் மின்னஞ்சலிலும் மேற்காண் கேள்விகளை பதிவு செய்யலாம். இவ்வாறு பலரிடமிருந்து பெறப்படும் வினாக்களை தொகுத்து, வாராவாரம் சனிக்கிழமைகளில் பாடவாரியாக கல்வித்தொலைக்காட்சியில் வினா - விடை (Q & A) நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இதன் மூலம் பயனடையலாம்.
2. அனைத்து வகுப்பு, அனைத்து பாடங்களுக்கான காணொளி இந்த இணையதளத்தில் கிடைக்குமா? ஆம். கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வீட்டுப் பள்ளியாக கருதப்படுகிறது. முறையான பள்ளி நேரத்தில் வகுப்புகள் எவ்வாறு பாடவாரியாக, தலைப்புவாரியாக, அலகு வாரியாக நடத்தப்படுமோ, அதே வகையில் பாடங்கள், காணொளி காட்சியாக வரிசைக்கிரமமாக ஒளிபரப்பப்படும். 3. நாள்தோறும் எந்தெந்த நேரத்தில், எந்தெந்த பாடங்கள் குறித்து இணையவழி வகுப்பு நடத்தப்படும்
என்ற நிகழ்ச்சி நிரல் முன்கூட்டியே வெளியிடப்படுமா? ஆம். Standardised Time table - முறைப்படுத்தப்பட்ட ஒளிபரப்பு பட்டியல் - பள்ளியில் பின்பற்றப்படும் கால அட்டவணைப் போன்று வெளியிடப்படும்.
கலவி தொலைக்காட்சி கல்வித் தொலைக்காட்சி Cable Numbers:
1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200
2. SCV - 98
3. TCCL - 200
4. VK DIGITAL - 55
5. AKSHAYA CABLE - 17
Der er
Education TV
Education TV
COVE, OR TABENDU
CONT, ICF TAMILNADU
கல்வித் தொலைக்காட்சியின் யுட்யூப் சேனல் லிங்க்: https://www.youtube.com/c/kalvitvofficial/
இணையதள முகவரி
https://www.kalvitholaikaatchi.com/
https://www.youtube.com/c/kalvitvofficial
இணைப்பு - 2 கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews