நீட் தேர்வு நெருங்கி வரும் நிலையில், தேர்வு பயத்தினால் கோவையில் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு தொடர்பாக வருடந்தோறும் பல்வேறு இடங்களில் உயிரிழப்பானது தொடர் கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் ஆர்.எஸ் புறம் பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற 19 வயது மாணவி நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்து கொண்டது மற்ற மாணவர்களிடையே பெரும் பீதியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த மாணவி கடந்த வருடம் நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெறாமல் இருந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மீண்டும் இந்தாண்டு தேர்வெழுந்த இந்த மாணவி தன்னை தயார்படுத்தி கொண்டிருந்தார். மேலும் இதுதொடர்பாக அகாடெமிக் ஒன்றில் சேர்ந்து 2 வருடமாக இந்த மாணவி நீட் தேர்விற்காக படித்து வந்துள்ளார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெற இருந்த நீட் தேர்வானது செப்டெம்பர் மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தாலும், நீட் தேர்வுக்கு விலக்கில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வானது கண்டிப்பாக செப்டெம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
இதனையடுத்து தன்னை தேர்வுக்கு தயார்படுத்தி வந்த 19 வயதுடைய சுபஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வின் கேள்விகளை ஏற்றுக்கொள்ள மிகவும் பயந்துள்ளார். அதன் காரணமாக மாணவி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அனிதா என்ற மாணவி 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் மருத்துவ கனவோடு இருந்த மாணவி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அனைத்து மக்களிடையே பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி அனைவரும் குரல் எழுப்பினர். மேலும் நீட் தேர்வை பொறுத்தவரையில் மருத்துவ கனவை சிதைக்கும் வகையிலேயே அமைந்துள்ளதாக அனைத்து தரப்பினரும் குற்றம் சாட்டினர். மேலும் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவம் மீண்டும் மக்களிடையே பெரும் புயலை கிளப்பி உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.