Breaking

Thursday, August 13, 2020

கல்வி கட்டண பாக்கி செலுத்தாமல் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்க்க டிசி கேட்டு பெற்றோர் வற்புறுத்தல்: நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மார்ச் மாதம் 25ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜூன் மாதம் தொடங்க வேண்டிய 2020-2021ம் கல்வி ஆண்டு, இன்னும் தொடங்க வில்லை. இந்த சூழ்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் அளித்த பேட்டியின் போது, பள்ளிகளை இப்போது திறப்பதற்கான வாய்ப்பு இல்லை. எனினும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை 17ம் தேதி முதல் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு பிறகு, 1 முதல் 9ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் அரசு மற்றும் தனியார் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும், முதல்வர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தங்கள் பிள்ளைகளின் டிசியை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனால் தனியார் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் வேறு தனியார் பள்ளியில் சேர்க்கவும், பெரும்பாலோனோர் கல்வி கட்டணம் செலுத்த வசதி இல்லாத காரணத்தால் அரசு பள்ளியில் சேர்க்கவும் டிசி கேட்டு வருகின்றனர். குறிப்பாக 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் பள்ளி கட்டணத்தை செலுத்த வழியில்லாமல் டிசி கேட்பதாக பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர். ஆனால் இது குறித்து தனியார் பள்ளிகள் தரப்பில் கூறப்படுவதாவது: கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த மாதங்களுக்கான கல்விக் கட்டணம்,நிலுவையில் உள்ள கல்விக் கட்டணங்களை யாரெல்லாம் தர வேண்டுமோ அவர்களில் பலர் தற்போது டிசி கேட்கின்றனர். குறிப்பாக 5ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் தான் டிசி கேட்கின்றனர். இவர்கள் வேறு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கப்போவதாக கூறுகின்றனர். நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டால் அதற்கு அவர்களிடம் இருந்து பதில் இல்லை. இருப்பினும் டிசி வேண்டும் என்று கேட்கின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog