தனிப்பட்ட காரணத்திற்காக பள்ளிக்கு வரச்சொல்லி கட்டாயம் - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புலம்பல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 27, 2020

Comments:0

தனிப்பட்ட காரணத்திற்காக பள்ளிக்கு வரச்சொல்லி கட்டாயம் - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புலம்பல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சேலம் அருகே ஊரடங்கு சமயத்திலும் தனிப்பட்ட காரணங்களுக்காக, அரசுப்பள்ளி ஆசிரியர்களை பள்ளிக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துவதாக தலைமை ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறப்பு தாமதமாகி வருகிறது. இருந்த போதிலும், பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம், பாடபுத்தகம் ஏற்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக, சுழற்சி அடிப்படையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, சேலம் மாவட்டத்தில் முதல்வர் தொகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியரின் தனிப்பட்ட காரணங்களுக்காக, ஆசிரியர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: கொரோனா ஊரடங்கிலும், அரசுப்பள்ளிகளில் உள்ள பணிகளை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். நாளொன்றுக்கு ஓரிருவர் வீதம், கார் மற்றும் டூவீலர் மூலம் வந்து செல்ல வாய்ப்புடையவர்களை மட்டும், தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு அழைக்கின்றனர். ஆனால், முதல்வரின் சொந்த தொகுதியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர், அவரது `சொந்த காரணத்திற்காக’ ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த பள்ளியின், தலைமை ஆசிரியரும், அடுத்த நிலையில் உள்ள பெண் ஆசிரியையும் ஒருவரையொருவர் விரும்பியுள்ளனர். ஆனால், தலைமை ஆசிரியர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த பெண் ஆசிரியை மட்டும் இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. ஒரே பள்ளியில் பணிவாய்ப்பு பெற்ற இருவரும், பள்ளியிலேயே கணவன்-மனைவி போல வாழ்ந்து வருகின்றனர். நாள்தோறும் பள்ளிக்கு வரும் இவர்கள், அலுவலகத்திலேயே ஒன்றாக பொழுதை கழிக்கின்றனர். பதவி உயர்வு கிடைத்தும் ஏற்காத அந்த பெண் ஆசிரியை, தலைமை ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்திற்கு லட்சக்கணக்கில் செலவு செய்து வருகிறார். இதனால் அந்த பெண் ஆசிரியை சொல்வதையே வேத வாக்காக எடுத்துக்கொள்ளும் தலைமை ஆசிரியர், பள்ளியில் பணிபுரிந்து வரும் மற்ற ஆசிரியர்களுக்கு சிக்கலையும், பல்வேறு சிரமங்களையும் தருகிறார். இதற்கு பள்ளியில் ஓ.பி. அடிக்கும் சில தொழிற்கல்வி ஆசிரியர்களும் உடந்தையாக உள்ளனர். தற்போது ஊரடங்கு காலத்திலும் அவர்கள் பள்ளிக்கு வந்து சந்தித்து வருகின்றனர். அதே சமயம், மற்றவர்கள் எதுவும் நினைத்து விடக்கூடாது என்பதற்காக, தினசரி 30 ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பஸ் இல்லை என காரணம் காட்டக்கூடாது எனவும், அவ்வாறு வரவில்லை என்றால் சிஇஓவிடம் புகார் அளிக்கப்படும் எனவும் மிரட்டுகிறார். இதனால் பயந்துபோன ஆசிரியர்கள், பள்ளியில் எந்த வேலையும் இல்லாவிட்டாலும், காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை பள்ளியில் இருந்து விட்டு வீட்டிற்கு செல்கின்றனர். கொரோனா பரவி வரும் நிலையில், அவசியமின்றி பள்ளிக்கு செல்வதற்கு, ஆசிரியர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தனிப்பட்ட காரணங்களுக்காக, பள்ளிக்கு வர வைப்பதால் ஆசிரியர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர். சஸ்பெண்ட் வரை சென்ற விவகாரம் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரின் மகன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 தேர்வெழுதினார். அப்போது, அவரது தேர்வு மையத்திற்கு சென்ற பெண் ஆசிரியை, தனது செல்வாக்கை பயன்படுத்தி மாணவனின் விடைத்தாளை வாங்கி, அவரே தன் கைப்பட விடைகளை எழுதி கொடுத்தார். விடைத்தாள் திருத்தும் போது, இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பெண் ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், `ஜிபிஎப் கடன் மூலம்’ அடுத்த சில மாதங்களிலேயே சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அதே பள்ளியில் பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews