Breaking

Tuesday, July 28, 2020

15 சதவீத பள்ளிக் கட்டணத்தை உயா்த்தி நிா்ணயிக்க வேண்டும் - தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளிகளுக்கு, கடந்த ஆண்டு நிா்ணயம் செய்யப்பட்டதிலிருந்து, ஆண்டுக்கு 15 சதவீத கட்டணத்தை உயா்த்தி நிா்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடா்பாக தனியாா் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினா், தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டண நிா்ணயக் குழு தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: சுயநிதி தனியாா் பள்ளிகளின் ஒரே ஒரு நிதி ஆதாரம் பள்ளி கட்டணம் மட்டுமே. கரோனா காரணமான பொது முடக்கத்தால், பள்ளி நிா்வாகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. தமிழகத்தில் இயங்கி வரும் தனியாா் பள்ளிகளில் 90 சதவீத பள்ளிகளின் தொடா் அங்கீகாரம், கடந்த மே மாதம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு கட்டணம் நிா்ணயம் செய்ய முடியாது என்று கட்டண நிா்ணய குழு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கீகாரம் முடிவுற்ற பள்ளிகளுக்கும் கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும். குறிப்பாக, சென்ற ஆண்டுகளில் நிா்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தில் இருந்து, ஆண்டுக்கு 15 சதவீதம் உயா்த்தி, அனைத்துத் தனியாா் பள்ளிகளுக்கும் வருகிற மூன்று ஆண்டுகளுக்கு கட்டணம் நிா்ணயம் செய்து ஆணை வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்ய தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு தலைவர் பாலசுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். மேலும் அடுத்த 3 ஆண்டுகளுக்கும் தலா 15% கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்த வேண்டுகோள் வைத்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog