தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
TAMIL NADU OPEN UNIVERSITY
முனைவர் . கு . ரத்னகுமார் பதிவாளர் தேதி : 29.06.2020
அன்பார்ந்த மாணாக்கர்களே ! வணக்கம் . தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 2004 - ஆம் ஆண்டு முதல் இளநிலைக் கல்வியியல் ( B.Ed. ) பட்டப்படிப்பை வழங்கி வருகின்றது . இப்படிப்பினை தேசிய ஆசிரியர் கல்வியியல் கழகம் ( NCTE ) அன்று முதல் இன்று வரை அங்கீகரித்துள்ளது.
இதுவரை சுமார் 12,500 நபர்கள் B.Ed , படிப்பினை முடித்து தமிழ்நாடு முழுவதுமாக ஆசிரியர்களாக பணியில் உள்ளனர் . தேசிய ஆசிரியர் கல்வியியல் கழகத்தின் அனுமதியுடன் 2018-19 - ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்றுள்ளது . இச்சேர்க்கையின் மூலமாக தாங்கள் B.Ed. சேர்ந்துள்ளீர்கள்.
B.Ed. படிப்பிற்கு 2017-18 ஆண்டுவரை பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு
( UGC ) அனுமதி பெற வேண்டியதில்லை ஆனால் 2018-19 - இல் இருந்து UGC- இன் அனுமதியும் பெறவேண்டும் என்று UGC அறிவித்திருந்தது . பல்கலைக்கழகம் , NCTE யின் அனுமதி பெற்றிருந்தமையின் காரணமாகவும் , UGC அனுமதி வேண்டி சமர்பிக்கப்பட்ட நிலையில் UGC யின் அனுமதி பெற்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்புடனும் 2018-19 - ஆம் ஆண்டிற்கான சேர்க்கையை மேற்கொண்டது.
சேர்க்கைக்கான வினாணப்பம் மற்றும் விவரப்படிவத்தில் " Released subject to recognition of the University Grants Commission " என்று குறிப்பிட்டு வழங்கப்பட்டதற்கான காரணம் UGC அனுமதியை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் . இதுவரை பல்கலைக்கழகம் UGC யிடம் அனுமதி பெறவேண்டி பலமுறை முறையீடுகள் செய்துள்ளது.
சேர்க்கைப் பெற்ற மாணாக்கர்கள் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்று பல்கலைக்கழகம் மன்றாடியது . 2018-19 - இல் UGC - யின் முன்னனுமதி பெறாமல் B.Ed சேர்க்கை நடைபெற்றுவிட்டமையால் , அச்சேர்க்கையை ரத்து செய்யுமாறு UGC உத்தரவிட்டுள்ளது .
இந்த உத்தரவின் அடிப்படையில் பல்கலைக்கழகம் 2018-19 ஆண்டு சேர்க்கையை மிகுந்த வருத்தத்துடன் ரத்து செய்ய அறிவித்துள்ளது . இதனால் நீங்கள் எந்த அளவிற்கு பாதிப்பிற்குள்ளாவீர்கள் என்று பல்கலைக்கழகம் மனப்பூர்வமாக உணர்கின்றது .
பல்கலைக்கழகம் 2018-19 - ஆம் ஆண்டு B.Ed , சேர்க்கையை தொடர்ந்து நடத்த இயலாததால் இதனின் இழப்பும் அதிகமாக உள்ளது . படிப்பு மையங்கள் மேற்கொண்ட வளாக நிகழ்வுகளுக்கு செலவீனங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது . தங்கள் அனைவருக்கும் சுய கற்றல் பாடப்பொருள்கள் அளிக்கப்பட்டுள்ளது . அத்துடன் , தாங்கள் பயின்ற காலநேரத்தையும் இழந்திருக்கிறீர்கள் என்பதை நன்கு உணர்கின்றது .
இச்சூழலில் , தாங்கள் பல்கலைக்கழக்திற்கு சமர்பித்துள்ள B.Ed. சேர்க்கை , தேர்வு ஆகியவற்றிற்கான தொகையினை தங்களுக்கு அளிக்க பல்கலைக்கழகத்தின் மேன்மைதங்கிய ஆட்சிக்குழு முடிவு செய்துள்ளது . இதனால் , தாங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதியளித்தல் படிவத்தினை பூர்த்தி செய்து எங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் soetnou123@gmail.com மூலமாகவோ அனுப்பிவைப்பதன் மூலம் நீங்கள் செலுத்திய முழு தொகையினை உடனே திரும்பப் பெறலாம் .
மீண்டும் , தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மிகுந்த மன வருத்தத்தினை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது . இதுபோன்ற நிகழ்வுகள் , வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்கமிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவோம் என்று உறுதியையும் தற்பொழுது வழங்குகிறோம் .
இப்படிக்கு ,
பதிவாளர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.