பாழும் அரசியல் உள்நோக்கத்தினால், மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை பாழாக்கும் நடவடிக்கைகளை, நிறுத்திக் கொள்ளுங்கள்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, பா.ஜ., செய்தி தொடர்பாளர், நாராயணன் திருப்பதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:'ராணுவ உடையில், திருக்குறளை சுட்டிக்காட்டும் பிரதமர், ராணுவத்தில் தமிழர் பங்கு என்ற, சி.பி.எஸ்.இ., பாடத்தை நீக்குகிறார். தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், ஈ.வெ.ரா., சிந்தனைகள், ம.பொ.சி.,யின் எல்லை போராட்டம் ஆகியவற்றை, மீண்டும் இணைக்க மறுத்தால், இம்மண்ணில், நோட்டாவை தாண்டுவதை கூட, பா.ஜ., மறந்து விடலாம்' என, ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொரோனா பேரிடர் காரணமாக, மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம், அனைத்து பாடங்களிலும், 30 சதவீதத்தை குறைத்துள்ளது. மொத்தம் உள்ள, ஒன்பது பிரிவுகளில், மூன்று பிரிவுகளை நீக்கியுள்ளது. ஸ்டாலின் குறிப்பிட்ட தலைப்புகள் அல்லாது, ராமானுஜர், நாச்சியார், ஆண்டாள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளும் இடம் பெற்றிருந்தன. அதை, அவர் மறந்து விட்டார். இந்த பாடங்களுக்கு பதில், வேறு எந்த பாடங்களை நீக்க வேண்டும் என்கிறார், ஸ்டாலின்
ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தின் முதல் பிரிவில், 'திராவிட மொழி குடும்பம், கல்வி மற்றும் கல்வியில் சிறந்த பெண்கள்' என்ற தலைப்பில் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை நீக்க வேண்டும் என்கிறாரா ஸ்டாலின்? மூன்றாம் பிரிவில், பண்பாடு என்ற தலைப்பில், 'ஏறு தழுவுதல்' குறித்த பகுதி இடம்பெற்றுள்ளது. இதை வேண்டாம் என்கிறாரா ஸ்டாலின்?
மாநில பாடத்திட்டத்திற்கு, 'ஆன்லைன்' வகுப்பே கூடாது எனக்கூறும் தி.மு.க., தான், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 30 சதவீதம் குறைப்பதை கண்டிக்கிறது. அதன் இரட்டை நிலைபாட்டை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க.,வும் மற்ற எதிர்க்கட்சியினரும், கல்வியில் அரசியல் செய்வது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாழும் அரசியல் உள் நோக்கத்தினால், மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை பாழாக்கும் நடவடிக்கைகளை, நிறுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.