பள்ளி, கல்லூரி மாணவருக்கான மாநில அளவில் கட்டுரை போட்டி: கடைசி நாள் ஜூலை 31 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 20, 2020

1 Comments

பள்ளி, கல்லூரி மாணவருக்கான மாநில அளவில் கட்டுரை போட்டி: கடைசி நாள் ஜூலை 31

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நீர் வளம் காக்கும் சிந்தனையை வளர்க்கும் நோக்கில் எய்ம், நீர் இணையம் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாநில அளவிலான கட்டுரைப் போட்டியை நடத்த உள்ளன. மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான நீரின் தேவையை உணரும் வகையிலும், நீர் சேமிப்பு, நீர் பாசனம், நீர் நிலைபாதுகாப்பு முறைகளைப் பற்றிய சிந்தனைகளை வருங்கால தலைமுறையினரிடம் கொண்டுசெல்லும் நோக்கில் இந்தக்கட்டுரைப் போட்டி நடைபெறு கிறது. ‘நீர் வளம் காக்கும் நெறிகளில் புதுமை சிந்தனைகள்’ என்ற தலைப்பிலான இந்த கட்டுரைப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். பள்ளி, கல்லூரி என இருபிரிவுகளாகப் போட்டி நடைபெறும். பதிவுக் கட்டணம் கிடையாது. இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள் சுயமாக சிந்தித்து, புதிய யுக்திகளைக் கையாண்டு நீரைக் காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 200 முதல்300 வார்த்தைகளுக்குள் கட்டுரையாக எழுத வேண்டும். அக் கட்டுரையை www.aimngo.com, www.neerinaiyam.org ஆகிய இணைய தளங்கள் வழியாக ஜூலை31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த கட்டுரைகளை எழுதும் 100 மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படும். எய்ம் தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர் மற்றும் ஆலோசகர் ஆ.நாகராசு, நீர் இணையம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் வினோத் கலியபெருமாள் ஆகியோர் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு சிறந்தகட்டுரைகளைத் தேர்வு செய்து,ஆகஸ்ட்15 அன்று முடிவுகளை அறிவிக்கும் என்று எய்ம் தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாகஅறங்காவலர் பி.ஏ.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வுக்கான மீடியா பார்ட்னராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உள்ளது. கூடுதல்விவரங்களுக்கு 9786046231 என்ற செல்பேசியில் தொடர்பு கொள்ளவும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews