பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 16, 2020

Comments:0

பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2021 ம் கல்வியாண்டிற்கான அனைத்து வகுப்பு மாணவ - மாணவியர்களுக்கும் அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடநூல்கள் , பள்ளி துவங்குவதற்கு முன்னர் நேரடியாக அந்தந்த பள்ளிகளிலேயே வழங்குதல் சார்ந்து கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
1 விலையில்லா பாடநூல்கள் , தமிழ்நாடு பாடநூல் கழக விநியோக மையங்களிலிருந்து தேவையான எண்ணிக்கையில் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலக விநியோக மையங்களுக்கு 1806.2020 க்கு முன்னர் வழங்கப்பட்டுவிடும் . அவற்றை மாவட்டக் கல்வி அலுவலர்கள் 22.062020 முதல் 30.062020 க்கு முன்னர் அந்தந்த பள்ளிகளில் நேரடியாக தனியார் வாகனம் மூலம் தனியார் வேலையாட்களை வைத்து நேரடியாக அந்தந்த வழித்தடங்கள் வாயிலாக சம்பந்தப்பட்ட தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கவேண்டும் . சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஜூலை முதல் வாரத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். 2 மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் எந்தெந்த தேதியில் எந்தெந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்ற விவரத்தை முன்னதாகவே தலைமையாசிரியருக்கு தெரிவித்து வழங்கவிருக்கும் பாடநூல்களை கொண்டு செல்லும்போது தலைமையாசிரியரை பள்ளியில் இருக்க அறிவுரைவழங்க வேண்டும்.
3. மாவட்டக் கல்வி அலுவலர்களால் பள்ளியில் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் பள்ளிக்கு தேவையான எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர்கள் சரிபார்த்து கொள்ளவேண்டும். குறைவாக பெறப்படுமாயின் அந்த தகவலை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவருக்கு தெரிவித்து பள்ளி துவங்குவதற்கு முன்னர் அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
4. இப்பணிகளை மேற்கொள்வதற்கான போக்குவரத்து செலவினங்கள் இவ்வியக்ககம் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.
5. மேற்காணும் பொருட்களை தனிநபர்களை வைத்து வாகனத்தில் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பணியின் போது சரியான எண்ணிக்கையில் விநியோகம் செய்வதை கண்காணிக்க முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களை ஒவ்வொரு வாகனத்துடனும் அனுப்பிட வேண்டுமென அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்படி பணிகளை மேற்கொள்ளும் போது கொரோனா நோய்தொற்று ஏற்படாதவகையில் சமூக விலகலைக் கடைபிடித்து, அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றுவதுடன் பணியாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணிபுரிவதை முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்டிப்பாக கண்காணிக்குமாறும் , அனைத்து முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்காணும் அறிவுரைகளின்படி செயல்பட்டு பள்ளிகளுக்கு நேரடியாக விலையில்லா பாடநூல்கள் , பள்ளியிலேயே விநியோகம் செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர்களால் அமைக்கப்பட்ட வழித்தடங்களில் 22.06.2020 முதல் விநியோகம் செய்யும் பணிகளை துவங்கி 30.06.2020 க்கு முன்னர் அனைத்து விலையில்லா பாடநூல்கள் , நோட்டுப் புத்தகம் மற்றும் இதர விலையில்லா பொருட்கள் பள்ளிகளுக்கு சென்றடைந்துவிட்ட விவரத்தை 01.07.2020 அன்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் இயக்குநருக்கு அறிக்கை பணிந்தனுப்பவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews