Breaking

Tuesday, June 16, 2020

புதுச்சேரி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு ரத்து!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. செய்முறை தேர்வுகள் மற்றும் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே இந்த நிலையில் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் இந்த ஆண்டு இன்னும் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் முதலாமாண்டு இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் கிட்டத்தட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது இருப்பினும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த வாய்ப்பு இருப்பதாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் இறுதியாண்டு தேர்வு இப்போதைக்கு நடத்தும் வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது இந்த நிலையில் புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக செய்முறை தேர்வு மற்றும் உள் மதிப்பீட்டு மதிப்பின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தை அடுத்து மற்ற பல்கலைக்கழகமும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog