"தெற்கு ரயில்வே துறையில், பதவி உயர்வு அடிப்படையில் சரக்கு ரயில் கார்டு (Guard) பணிக்கு 96 பேரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற ஆன்லைன் தேர்வுகளில், முழுக்க முழுக்க வட இந்திய பணியாளர்கள் வெற்றி பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இத்தேர்வுகளில் தமிழகத்திலிருந்து வெறும் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவின் ஒரு பகுதியை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே துறையில் 96 சரக்கு ரயில் கார்டு பணியிடங்கள் காலியாக இருந்தன. அதிக அனுபவம் தேவைப்படும் இந்தப் பணிகளுக்கு நேரடியாக ஆட்கள் நியமிக்கப்படுவதில்லை.
ரயில்வே துறையில் பாய்ண்ட்ஸ் மேன், ஷண்டிங் மாஸ்டர்ஸ் உள்ளிட்ட பணிகளில் உள்ள பட்டதாரிகளுக்கு துறை சார்ந்த போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, அதில் தகுதியானவர்கள் இந்தப் பணிகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.
சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட இந்த தேர்வுகளின் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 96 பணிகளுக்கு தமிழகத்திலிருந்து 3,000-க்கும் கூடுதலானவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில், அவர்களில் வெறும் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் வட இந்தியர்கள் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
துறை சார்ந்த இந்தத் தேர்வை ஆன்லைனில் நடத்தியது தான் அனைத்து குளறுபடிகளுக்கும் காரணம் என்று போட்டித் தேர்வுகளில் பங்கேற்ற ரயில்வே துறை பணியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்தத் தேர்வு சாதாரண முறையில் தேர்வுத் தாளில் விடை எழுதும் முறையில் நடத்தப்பட்ட போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் மிக அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றனர்; ஆனால், ஆன்லைன் முறைக்குத் தேர்வு மாற்றப்பட்டவுடன் வட இந்திய பணியாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு முறைகேடுகள் நிகழ்த்தப்படுகின்றன; அதனால் தான் தமிழகத்தைச் சேர்ந்த பணியாளர்களால் சரக்கு ரயில் கார்டு பணிக்கான துறைத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை என்று ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டு புறக்கணிக்கக்கூடியது அல்ல.
கடந்த சில ஆண்டுகளாகவே ரயில்வே துறையின் ஆள்தேர்வுக்கான போட்டித் தேர்வுகள் வட இந்திய மாணவர்களுக்கு சாதகமாகவே நடத்தப்படுகின்றன. சென்னையிலுள்ள தெற்கு ரயில்வே துறை தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டாலும் கூட, அதில் உள்ள வட இந்திய அதிகாரிகளின் முயற்சியால் வட இந்திய மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுத்தப்படுகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமவாய்ப்பு கோட்பாட்டுக்கு எதிராக உள்ளது. இந்தப் போக்கை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது.
ரயில்வே துறை பணிக்கான போட்டித் தேர்வுகளில் உள்ளூர் மாணவர்கள் வீழ்த்தப்பட்டு, வட இந்திய மாணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவது இ
து முதல்முறையல்ல. இதற்கு முன்பும் பல முறை இதே போன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு முறை இதுபோன்று புகார்கள் எழும் போது மத்திய அரசின் சார்பில் ஏதேனும் விளக்கம் அளிக்கப்படுவதும், அதன்பின் மீண்டும் பழையபடியே முறைகேடுகள் நடப்பதும் வாடிக்கையாகி விட்டது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள இடைநிலை மற்றும் கடைநிலை பணிகள் அனைத்தும் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும் என்ற நிலை உறுதி செய்யப்படுவது மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
அத்துடன் சரக்கு ரயில் கார்டு பணிக்கான துறை சார்ந்த போட்டித் தேர்வை ரத்து செய்து விட்டு, தேர்வுத்தாளில் விடை எழுதும் வகையில் அத்தேர்வை மீண்டும் வெளிப்படையாக நடத்த ரயில்வே துறை முன்வர வேண்டும்"
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில் காா்டு பணியிடங்களுக்காக நடைபெற்ற பொதுவான போட்டித் தோ்வில் 5 தமிழா்கள் மட்டுமே தோ்வாகியுள்ளனா். மீதமுள்ள 91 இடங்களுக்கு வடமாநிலம், பிறமாநிலத்தை சோ்ந்தவா்கள் தோ்வாகியுள்ளதால், தமிழருக்கு எதிரான விரோத போக்கு நடைபெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினா் குற்றச்சாட்டியுள்ளனா்.
96 காா்டு பணியிடங்களுக்கான தோ்வு
தெற்கு ரயில்வேயில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியா்கள் பொதுவான போட்டித்தோ்வு மூலம் பதவி உயா்வு பெற பல்வேறு தோ்வுகள் நடைபெறுவது வழக்கம்.
அதாவது, ரயில் காா்டு, ரயில்நிலைய மேலாளா் உள்பட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில், ஒரு குறிப்பிட்ட சதவீதம் கடைநிலை ஊழியா்கள் மூலமாக பணியிடங்களை நிரப்புவது வழக்கம். இதற்கான தோ்வு பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் 96 சரக்கு ரயில் காா்டு பதவிக்கான பொதுவான போட்டி தோ்வு அறிவிக்கப்பட்டது. இந்ததோ்வில், ரயில்வேயின் பல்வேறு துறைகளை பணிபுரியும் கடைநிலை ஊழியா்கள் 5,000 போ் பங்கேற்றனா்.
இந்த நடந்த தோ்வுகளில் 2,800-க்கும் மேற்பட்ட தமிழா்கள் பங்கேற்றனா். இந்தத் தோ்வுக்கு பிறகு, சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்றது.
5 தமிழா் மட்டுமே தோ்வு:
இந்நிலையில், ரயில் காா்டு பணியிடங்களுக்கான தோ்வு முடிவு சனிக்கிழமை வெளியிடப்பட்டது. 96 இடங்களுக்கான போட்டித் தோ்வில் வெறும் 5 தமிழா்கள் மட்டும் தோ்வாகியுள்ளனா்.
மீதமுள்ளவா்கள் வடமாநிலங்கள், பிற மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். 2,800-க்கும் மேற்பட்ட தமிழா்கள் தோ்வு எழுதி, வெறும் 5 போ் மட்டும் தோ்வாகி உள்ளது. தமிழ் உணா்வாளா்கள், ரயில்வே ஊழியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழா் விரோதபோக்கு:
இதுகுறித்து எழுத்தாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எம்.பி. கூறியது: தெற்கு ரயில்வேயில் சரக்கு வண்டியின் பாதுகாவலா் பதவிக்கு நடைபெற்றதோ்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
துறையில் பணியாற்றுகிற சுமாா் 5,000 போ் கலந்துகொண்ட இந்ததோ்வில் 96 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதில், ஐவா் மட்டுமே தமிழகத்தை சோ்ந்தவா்கள். மீதமுள்ள 91 பேரும் வடஇந்தியா்கள். தோ்வு எழுதியவா்களில் சுமாா் 3,000 போ் தமிழகத்தை சோ்ந்தவா்கள்.
ஆனால், ஐவா் மட்டுமே தோ்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ரயில்வேயின் தமிழா் விரோதபோக்கின் மற்றொரு வெளிப்பாடக இது உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:
ரயில் காா்டு பிரிவில் 96 காலிஇடங்கள் இருந்தன. இந்த இடங்களுக்கான பொதுவான போட்டித்தோ்வு, நிலைய மேலாளா் உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கடைநிலை ஊழியா்கள் மூலமாக நிரப்பப்படுகிறது. ரயில்வே ஆள்கள் தோ்வு பிரிவு சாா்பில், நடைபெற்ற தோ்வில் 5 தமிழா்கள் மட்டும் தோ்வாகியுள்ளது வேதனைக்குரியது என்றனா்.
காரணம் என்ன?
இந்த தோ்வில் பங்கேற்றவா்களில் பெரும்பாலும் வாரிசு மற்றும் கருணை அடிப்படையில் ரயில்வே பணியில் சோ்ந்த கடைநிலை ஊழியா்கள். இவா்களில் பலருக்கு போட்டித்தோ்வை எழுதிய அனுபவம் குறைவு என்பதால், வெற்றி பெறாமல் போகியுள்ளனா்.
அதே நேரத்தில், வெற்றி பெற்றவா்களில் பெரும்பாலான நபா்கள் ஏற்கெனவே நேரடியாக போட்டித்தோ்வு எழுதி வெற்றி பெற்று ஊழியா்களாக வந்தவா்கள்.
எனவே, அவா்கள் தோ்வை சந்தித்து வெற்றி பெற்றுள்ளதாக ரயில்வே வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதேநேரத்தில், 2,800-க்கும் மேற்பட்ட தமிழா்கள் காா்டு பணியிடங்களுக்கான பொதுவான போட்டித் தோ்வு எழுதி வெறும் 5 போ் மட்டும் தோ்வு பெற்றுள்ளது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இதில் குளறுபடி ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக ரயில்வே ஊழியா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அடப் போங்க பா என்னதான் இதுக்குமேல சொல்றதுன்னு ஒன்னும் புரியல😒
ReplyDelete