பள்ளியை திறப்பது குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவால் மாணவர்கள் மகிழ்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 02, 2020

1 Comments

பள்ளியை திறப்பது குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவால் மாணவர்கள் மகிழ்ச்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நாடு முழுவதும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வு அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு கல்விநிலையங்கள் மூடப்பட்டன. தமிழகத்திலும் இதே நிலை தொடர்ந்ததால் இங்கும் பொத்துத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஜூன் 15ஆம் தேதி தேர்வு:
தமிழக அரசு பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு ( ஒரு தேர்வு) மாணவர்களுக்கான தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்ட போது எல்லாம் எதிர்க் கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தேர்வை தள்ளிவைக்க வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் தேர்வு வேண்டாம் என்றெல்லாம் சொல்லி வந்தன. தமிழக அரசும் பொதுத் தேர்வு தேதியை தள்ளி வைத்தது. அதன்படி ஜூன் 15ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற இருக்கின்றன.
கருத்து கேட்பு:
இதனிடையே தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி எழுந்த போதெல்லாம் அதற்கான முடிவு தற்போது எடுக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறையும், தமிழக அரசும் தெரிவித்து வந்தது. இந்த நிலையில்தான் தமிழக அரசு பள்ளியை திறப்பது குறித்து ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அந்த குழு கொடுக்கும் பரிந்துரைப்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தனியார் பள்ளி நிர்வாகத்திடமும் கருத்து கேட்கப்பட்டது. பெற்றோர்கள் முடிவு:
இந்த சூழ்நிலையில் தற்போது பள்ளி திறப்பது குறித்து பெற்றோர்களிடமும் கருத்துக்களை கேட்க தமிழக அரசு முன்வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பள்ளி எப்போது திறக்கலாம் ? பள்ளியை திறந்தால் மாணவர்களை பயமின்றி பெற்றோர்கள் அனுப்புவார்களா ? போன்ற விஷயங்களை எல்லாம் பெற்றோர்களிடம் கேட்டதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
குஷியான மாணவர்கள்:
தமிழக அரசின் இந்த முடிவால் மாணவர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் பெற்றோரின் மனநிலையை தங்களது குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் நிலையில் இருக்காது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்துக்கும் மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, அதேபோல உயிரிழப்பும் கடந்த 2 நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் பதிவாகியிருப்பது பெற்றோர்களுக்கு கூடுதல் பீதியை ஏற்படுத்தி இருக்கும். எனவே எந்த ஒரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews