திருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க. எண் . 6977 / ஆ 3 / 2019
நாள் . 06.06.2020 ,
பொருள்;
பள்ளிக்கல்வி - அரசுப் பொதுத்தேர்வுகள்- பத்தாம் வகுப்பு இடைநிலை பொது தேர்வுகள் மற்றும் 1 - ம் / 12 ஆம் வகுப்புகளுக்கான விடுப்பட்ட பொதுத் தேர்வுகள் - ஜீன் -2020 ல் தொடங்கி நடைபெறுதல்
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி கண்டறியும் பொருட்டு வெப்பம் கண்டறியும் கருவி ( Thermal Scanner ) பயன்படுத்தி அறிக்கை வழங்கும் பொருட்டு ஆசிரியர்கள் நியமனம் - சார்பு
பார்வை துறை அரசாணை எண் .246 , வருவாய் மற்றும் போரிட மேலாண்மை
( டி.எம் .2 ) நாள் .20.05.2020 ,
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு இடைநிலை பொது தேர்வுகள் மற்றும்
11 - ம் / 12 ஆம் வகுப்புகளுக்கான விடுப்பட்ட பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரை நடைபெறவுள்ளது .
மேற்படி நாட்களில் தேர்வு எழுத வருகை தரும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி கண்டறியும் பொருட்டு , அனைத்து பள்ளிகளுக்கும் வெப்பம் கண்டறியும் கருவி ( Thermal Scanner வழங்கப்படும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வருகை தந்த உடன் , சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கை கழுவும் திரவம் ( Hand sanitizer ) கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொண்ட பின்னரே வெப்பம் கண்டறியும் கருவி ( Thermal Scanner ) அமைக்கப்பட்டுள்ள அறைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் .
மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்து வெப்பம் கண்டறியும் கருவி ( Thermal Scanner ) யினை பயன்படுத்தி மாணவர்களை சோதனை செய்யும் பணியினை மேற்கொள்ளும் பொருட்டு ஒரு பள்ளிக்கு இரண்டு தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களை
( இரண்டு கருவிகள்வழங்கப்படும் நிலையில் 3 ஆசிரியர்கள் ) நியமனம் செய்து , நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வருகை தந்து பணியினை மேற்கொள்ளத் தக்க வகையில் உரிய பணி ஆணை வழங்கி அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள் .
முதன்மைக்கல்வி அலுவலர் திருச்சிராப்பள்ளி .
பெறுதல்
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.