கல்வி வளர்ச்சிக்கு ஆன்லைன் டி.வி., ரேடியோ, : நவீன தொழில் நுட்பம் பயன்படுத்த முடிவு - மத்திய அரசின் இன்றைய அறிவிப்பு முழு விவரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 17, 2020

Comments:0

கல்வி வளர்ச்சிக்கு ஆன்லைன் டி.வி., ரேடியோ, : நவீன தொழில் நுட்பம் பயன்படுத்த முடிவு - மத்திய அரசின் இன்றைய அறிவிப்பு முழு விவரம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தன்னிறைவு இந்தியா திட்டத்தில் கடைசி கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: *கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.4113 கோடி மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. *மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் உள்நாட்டில்தயாரிக்கப்படுகின்றன. *நாடு முழுவதும் பரிசோதனை மையம் அமைகக 550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. *சுகாதார பணியாளர்களுக்கு 87 லட்சம் என்95 மாஸ்க்குகள், 11 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. 51 லட்சம் பிபிஇ கிட்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. *கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.15 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. *மருத்துவம், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது *உடல்கவசம் தயாரிக்க 3000 நிறுவனங்கள் நம்நாட்டில் செயல்படுகின்றன. *சுகாதார திட்டத்திற்கான செலவினங்கள் அதிகரிக்கப்படும். *அனைத்து மாவட்டங்களிலும தொற்றுநோய் தொடர்பான ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
*அனைத்து மருத்துவமனைகளிலும் தொற்று நோய் பிரிவு அமைக்கப்படும் *ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது *பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழலில் ஆன்லைன் கல்விக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும். *இ பாடசாலை திட்டத்தில் மேலும் 200 பாடப்புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வி சேனல்கள் உருவாக்கப்படும். *பள்ளிகளில் தொழில்நுட்பம் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன *கல்வி சார்ந்த வீடியோ ஒளிபரப்ப 2 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் *கொரோனா பாதிப்பு குறைந்த உடன் தொழில்நுட்ப உதவியுடன் கல்வித்துறையை வலுப்படுத்த பிரதமர் இவித்யா திட்டம் *இ வித்யா தீஷா திட்டத்தின் கீழ் ஒரே தேசம், ஒரே கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் *டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வழி கற்பித்தல் திட்டம் *100க்கும் மேற்பட்ட பல்கலைகளில் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் வசதி மே மாதத்திற்குள் ஏற்படுத்தப்படும் *பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கும் இணையவழி கல்வி திட்டம்
*மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு பிரத்யேக மின்னணு பாட வகைகள் அமைக்கப்படும் *கல்விக்கு கம்யூனிட்டி ரேடியோ அதிகளவில்பயன்படுத்தப்படும் *மனோதர்பன்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படும். *தொடக்க கல்வியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு புதிய திறன் மேம்பாடு வரைவு திட்டங்கள் வகுக்கப்படும். *திவால் சட்டத்தின் கீழ் 44 சதவீத கடன் திருப்பி வசூலிக்கப்பட்டுள்ளது. *100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மேலும் 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. *ஏற்கனவே 61,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது *இதன் மூலம் மொத்தம் 300 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்க வழிவகை செய்யப்படும் *சுகாதார துறையில் பொது செலவின தொகை அதிகரிக்கப்படும். *சொந்த மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இது உதவும் *ஊரக நகர பகுதிகளில் சுகாதார நல மையங்கள் மேம்படுத்தப்படும். *எதிர்கால சுகாதார சவால்களை சந்திக்க இந்தியா சந்திக்க தயாராகிவருகிறது. *தொழில் துவங்கும் முறைகள் மேலும் எளிமையாக்கப்படும். *திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது ஒராண்டுக்கு ஒத்திவைக்கப்படும். இதனால், சிறு குறு நிறுவனங்கள் பயன்பெறும்
*கம்பெனி சட்டத்தில் உள்ள சில கிரிமினல் குற்றப்பிரிவுகளை தளர்த்த நடவடிக்கை *திவால் சட்டத்தின் கீழ் சிறு குறு தொழில் நடத்துவோருக்கு தனி தீர்ப்பாயம் அமைக்கப்படும் *சிறு குறு தொழில் நடத்துவோர் பாதிக்கப்படாத வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் *கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அவசர சட்டம் கொண்டு வரப்படும். *சிறு நிறுவனங்கள், தனிநபர் நிறுவனங்களின் வாராக்கடன்களுக்கு குறைந்தபட்ச அபராதம் வசூலிக்கப்படும் *திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்களை மீட்பதற்கு புதிய வழிமுறைகள் வகுக்கப்படும். *வங்கி கடனை செலுத்த முடியாதவர்கள் நீதிமன்றத்தை அணுகி காலக்கெடுவை நீட்டித்து கொள்ளலாம். *சில பொதுத்துறை நிறுவனங்கள் தவிர்த்து மற்ற நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்படும் * தனியார் பங்களிப்பு இருந்தாலும் பொதுத்துறை நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடு தொடரும் * அனைத்து துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் போட்டி போடலாம். * தனியார் முதலீட்டிற்கு அனுமதியில்லாத நிறுவனங்கள் பின்னர் அறிவிக்கப்படும். *ஒரே துறையில் 4க்கும் மேற்பட்ட பொதுத்துறைநிறுவனங்கள் இருந்தால் ஒன்றிணைக்கப்படும்.
* கொரோனா காரணமாக மாநில அரசின் வருவாய் குறைந்துள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.46,038 கோடி மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. * இக்கட்டான சூழ்நிலையில், மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. *வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறித்த காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறோம். * வருவாய் பற்றாக்குறை நிதியாக மாநில அரசுகளுக்கு ரூ.12,390 கோடி வழங்கப்பட்டுள்ளது. *பேரிடர் மீட்பு நிதியில் ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. *தன்னிறைவு இந்தியா திட்டத்தை செயல்படுத்த ஒத்திசைவான திட்டங்கள் தேவைப்படுகின்றன. *மாநில அரசுகளின் கடன் வாங்கும் வரம்பு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிப்பு. * மாநில அரசுகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பில் 14 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். 86 சதவீதத்தை பயன்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews